தோல்வியாளர் இந்தியா.. சாம்பியன் பாகிஸ்தானின் போலி முகத்தை கிழித்த பாண்டிங்.. நடந்தது என்ன?

Ricky Ponting
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணியினர் பாகிஸ்தான் அணிக்கு கைகொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையாக மாறியது.

சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதற்கு இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பிய இந்திய அணி இப்போட்டியின் முடிவில் கை கொடுக்க காத்திருந்த பாகிஸ்தான் வீரர்களிடம் கை குலுக்கவில்லை.

- Advertisement -

போலியான பாகிஸ்தான் ரசிகர்கள்:

அதற்கு முன்பாக டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் கை கொடுக்கவில்லை. அதற்கு பதிலடியாக போட்டியின் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா புறக்கணித்தார். மொத்தத்தில் தங்களுக்கு கை கொடுக்காத இந்திய அணியை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் விளையாட்டு உணர்வுக்கு எதிராக நடந்து கொண்ட இந்திய அணி மீது பாகிஸ்தான் வாரியம் புகார் செய்தது. இதற்கிடையே அப்போட்டியின் முடிவில் ஜென்டில்மேனாக நடந்து கொள்ளாத இந்தியா கிரிக்கெட்டின் தோல்வியாளர் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சொன்னதாக பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பாண்டிங் தெரிவித்ததாக பாகிஸ்தான் ரசிகர்கள் பரப்பியது பின்வருமாறு.

- Advertisement -

கிழித்த பாண்டிங்:

“இந்தப் போட்டி இந்தியா என்றென்றும் ஒரு மிகப்பெரிய தோல்வியுற்றவராக நினைவு கொள்ளப்படும். பாகிஸ்தான் அணி கடைசியில் கைகுலுக்க விரும்பிய விதம் அவர்களை இந்தியாவுடனான ஜென்டில்மேன் விளையாட்டின் சாம்பியன்களாக அழியாமல் நிலைநிறுத்தியது” என்று தெரிவித்தனர். அதைப் பார்த்ததுமே அது போலியான கருத்து என்பதை இந்திய ரசிகர்கள் கண்டறிந்தனர்.

இதையும் படிங்க: ட்வீட்டை டெலீட் செய்த பாகிஸ்தான் தலைவர்.. இந்தியா மீதான புகாரில் ஐசிசி வழங்கிய தீர்ப்பு என்ன?

ஏனெனில் ஆசியக் கோப்பை 2025 தொடர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவே இல்லை. இந்நிலையில் ஆசியக் கோப்பை சம்பந்தமாக தாம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று ரிக்கி பாண்டிங் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சமூக வலைதளங்களில் சில கருத்துக்கள் கூறப்படுவது எனக்குத் தெரியும். நான் திட்டவட்டமாக அந்த அறிக்கைகளை வெளியிடவில்லை என்பதையும் ஆசியக் கோப்பை குறித்து பகிரங்கமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளவும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து பாகிஸ்தான் ரசிகர்களின் போலி முகத்தை பாண்டிங் கிழித்துள்ளார் என்றால் மிகையாகாது.

Advertisement