இவர் ஒருத்தர் விக்கெட் எடுத்தா போதும் ஈஸியா சி.எஸ்.கே அணியை தோக்கடிச்சிடலாம் – பாண்டிங் போட்ட ஸ்கெட்ச்

Ponting

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

csk vs dc

தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார். அதனால் அவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் போகும் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதுவே அவருடைய ஐபிஎல் வாழ்க்கையின் கடைசி தொடராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தோனி விளையாடி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால் தோனியின் ஆட்டம் எவ்வாறு இருக்கப் போகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி அணியின் திட்டம் மற்றும் தோனியை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்த திட்டத்தையும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி தன்னைவிட உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு இந்திய அணிக்காக சிறப்பாக கேப்டன்சி செய்து வருகிறார். அவரைப் போல எல்லா சமயங்களிலும் தன்னால் உணர்ச்சியை கட்டுப் படுத்திக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

csk

மேலும் கேப்டனாக இருந்தபோது தோனி எப்போதும் அணியை வெற்றிபெறவே வைத்தார் மேலும் அணியில் உள்ள வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதனால் அவரால் எளிமையாக வீரர்களை கட்டுப்படுத்தி தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடிந்தது. அதேபோல் ஐ.பி.எல் தொடரிலும் சி.எஸ்.கே அணியை வெற்றிகரமான அணியாக பயணிக்க வைக்க முடிந்தது.

- Advertisement -

சிஎஸ்கே எப்போதும் ஒரு பலமான அணி. ஐபிஎல் தொடரின் அனைத்து தொடர்களிலும் மிக சவாலான அணியாக திகழ்ந்துள்ளது. மேலும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடரில் தோனியை கட்டுப்படுத்துவது குறித்து பேசிய பாண்டிங் கூறுகையில் : தோனிக்கு எதிராக நான் பயிற்சி அளிக்க இருக்கிறேன். அவர் டெல்லி அணிக்கு எதிராக ஆடும்போது தனது பேட்டிங்கின் மூலம் ரன்களை குவித்து வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

DC

அதாவது தோனியே ரன் குவிப்பை கட்டுப்படுத்தினால் அவரை ஆட்டமிழக்கச் செய்து சிஎஸ்கே அணியை வீழ்த்த முடியும் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத டெல்லி அணி தற்போது இளம் வீரர் ஐயர் தலைமையில் சிறப்பாக விளையாடி வருவதால் இம்முறை கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.