பி.சி.சி.ஐ வழங்கிய மிகப்பெரிய வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்த ரிக்கி பாண்டிங் – விவரம் இதோ

Ponting
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் தற்போது நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் இந்திய அணியில் அடுத்த பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார்கள் ? என்பதில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இறுதியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தற்போது பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Dravid

- Advertisement -

அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கும் டிராவிட் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவார் என்றும் பிசிசிஐ சார்பில் தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகின. மேலும் தற்போது ராகுல் டிராவிட் பதவி வகித்து வரும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து விலகி இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

இந்நிலையில் இந்த டிராவிட் நியமனத்திற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங்கிடம் பிசிசிஐ இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Ponting

அதன்படி வெளியான தகவலில் இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராக செயல்பட ரிக்கி பாண்டிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனாலும் அவர் அதை மறுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட மறுத்தார் என்ற முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர் முழு நேர பயிற்சியாளராக விருப்பமில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : மெகா ஏலத்திற்கு முன் சி.எஸ்.கே அணி தக்கவைக்கும் முதல் நபர் இவர்தான் – சி.எஸ்.கே அதிகாரபூர்வ அறிவிப்பு

தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பயிற்சியாளராக செயல்பட்டு வரும் பாண்டிங் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் பயிற்சியாளராக மட்டுமே செயல்பட்டு வருகிறார் என்றும் முழுநேர பயிற்சியாளராக விருப்பம் இல்லாததால் பிசிசிஐயின் இந்த ஆஃபரை அவர் மறுத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement