இருக்கையை அடிக்க சென்ற ரிஷப் பண்ட்.. சமாதானம் செய்த ரிக்கி பாண்டிங் – நடந்தது என்ன?

Pant
- Advertisement -

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது நேற்று சண்டிகார் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33 ரன்களையும், இம்பேக்ட் பிளேயர் அபிஷேக் கோரல் 32 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 15 மாதங்கள் கழித்து கிரிக்கெட் களத்திற்கு திரும்பியிருந்த வேளையில் 13 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 18 ரன்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இப்படி நீண்ட இடைவெளிக்கு பின்னர் களத்திற்கு திரும்பிய ரிஷப் பண்ட் தான் விரைவில் ஆட்டமிழந்ததை எண்ணி களத்தில் இருந்து வெளியேறும் போது தனது கால்களில் லேசாக பேட்டை வைத்து அடித்துக் கொண்டார். பின்னர் வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்ற ரிஷப் பண்ட் சற்று கோபமாக காணப்பட்டார்.

இதையும் படிங்க : 15 மாதங்கள் கழித்து கிரிக்கெட் களத்திற்கு திரும்பியது குறித்து பேசிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

அதோடு அவரின் முன் இருந்த இருக்கையை அடிக்கவும் முயன்றார். இதனை கவனித்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவரை தோளில் தட்டி சமாதானம் செய்த காட்சிகளும் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement