விராட் கோலியை பற்றி சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. ஆனா கம்பீர் இந்த மாதிரி கேரக்டர்.. பாண்டிங் விளக்கம்

Ricky Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 வருடங்களில் அவர் வெறும் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த சூழ்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய மண்ணில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் கடைசி 5 வருடங்களில் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ள விராட் கோலியின் ஃபார்ம் கவலையை கொடுப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார்.

- Advertisement -

கம்பீர் அதிரடி:

இருப்பினும் ஆஸ்திரேலியாவில் கடந்த காலங்களில் விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். எனவே விராட் கோலி பெரிய ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவில் ஃபார்முக்கு திரும்புவார் என்றும் பாண்டிங் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அது பற்றி பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவதற்கு பாண்டிங் யார்? என்று கம்பீர் அதிரடியான பதிலடி கொடுத்தார்.

மேலும் பாண்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பற்றி மட்டும் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் விராட், ரோஹித் சிறப்பாக விளையாடுவார்கள் என்று ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாம் சொன்ன கருத்தை கௌதம் கம்பீர் தவறாக புரிந்து கொண்டதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பாண்டிங் விளக்கம்:

“விராட் கோலியின் ஃபார்ம் கவலைக்குரியது என்று மட்டுமே நான் சொன்னேன். ஒருவேளை நீங்கள் விராட் கோலியிடமே கேட்டால் அவரும் தன்னுடைய ஆட்டத்தை பற்றி கொஞ்சம் கவலையை வெளிப்படுத்துவார். ஏனெனில் கடந்த வருடங்களைப் போல அவரால் சதங்களை அடிக்க முடியவில்லை. அதை சொன்ன நான் எந்த வகையிலும் விராட் கோலிக்கு பேசவில்லை”

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 3வது டி20 நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடியுள்ள அவர் அங்கே மீண்டும் வர ஆர்வமாக இருப்பார் என்று தான் சொன்னேன். கிளாஸ் வீரரான அவர் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடியுள்ளார். ஆனால் அது பற்றி கௌதம் கம்பீர் கொடுத்த ரியாக்ஷனை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். அவர் கொஞ்சம் முட்கள் நிறைந்த கேரக்டர். எனவே அவர் இப்படி திரும்பச் சொன்னதில் எனக்கு ஆச்சரியம் இல்லை” என்று கூறினார்.

Advertisement