தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டியிலும் இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்றுள்ளன. அதனால் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்தியா 2வது போட்டியில் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்காததால் தோல்வியை சந்தித்தது. அதேபோல வேகப்பந்து வீச்சும் சுமாராக அமைந்தது தோல்வியை கொடுத்தது. எனவே 3வது போட்டியில் வெற்றிக்கு அந்த தவறைக் திருத்திக் கொண்டு இந்தியா விளையாட வேண்டியது அவசியமாகிறது.
செஞ்சூரியன் மைதானம்:
மறுபுறம் 3வது போட்டியிலும் வெற்றி பெற தென்னாபிரிக்க அணி முயற்சிக்க உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்போட்டி நவம்பர் 13ஆம் தேதி தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. 1995ஆம் தேதி முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் 2009 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கே நடைபெற்ற 14 போட்டிகளிலும் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 6 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக இங்கே 2018இல் விளையாடிய ஒரு போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
வெதர் ரிப்போர்ட்:
செஞ்சூரியன் நகரில் நவம்பர் 13ஆம் தேதி மழை பெய்வதற்கு 10% மட்டுமே வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
செஞ்சூரியன் மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் இடமாக இருந்து வருகிறது. குறிப்பாக கடைசியாக இமைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக விளையாடி 258 ரன்கள் குவித்தது. ஆனால் பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 259 ரன்கள் குவித்து அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து உலக சாதனை படைத்தது.
2021 முதல் இங்கு நடைபெற்ற போட்டிகளில் 10 முறை 200க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்முறையும் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். அதே சமயம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி பவுலர்கள் துல்லியமாக பந்து வீசினால் விக்கெட்டுகளை எடுக்கலாம்.
இதையும் படிங்க: தம்மையே திணறடித்த இளம் வீராங்கனைகளுக்கு.. ஜாம்பவான் டிராவிட் கொடுத்த வேற லெவல் பாராட்டு
வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 192. இங்கு வரலாற்றில் நடைபெற்ற 14 போட்டிகளில் 7 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 7 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எதை தேர்ந்தெடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.