- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தரமான ஜஸ்பிரித் பும்ராவை இறங்கி அடிக்க இதான் ஒரே வழி.. ஆஸி அணிக்கு பாண்டிங் அட்வைஸ்

ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை வழி நடத்தினார்.

அந்த வாய்ப்பில் 150க்கு ஆல் அவுட்டாகி இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறிய போது மிரட்டலாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்ட உதவினார். மேலும் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதன் காரணமாக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராகவும் பும்ரா முன்னேறி சாதனை படைத்தார்.

- Advertisement -

பும்ராவை எதிர்கொள்ள:

வித்தியாசமான ஆக்சனை பயன்படுத்தி துல்லியமாக பந்து வீசும் அவரை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களே பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் பும்ராவுக்கு எதிராக விக்கெட்டை விடாமல் விளையாடினால் போதும் என்று நினைக்காமல் எப்படியாவது அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாட வேண்டுமென ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அதுவே அடுத்த போட்டிகளில் பும்ராவை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வதற்கான வழி என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நானாக இருந்தால் ஒவ்வொரு பந்திலும் அவருக்கு எதிராக இறங்கி சென்று அவருடைய தலைக்கு மேல் பந்தை அடிப்பேன். இப்படி சொல்வது நகைச்சுவையாக இருக்கும்”

- Advertisement -

பாண்டிங் அட்வைஸ்:

“ஆனால் நான் அவருக்கு எதிராக சுறுசுறுப்பாக இருக்கவும் அழுத்தத்தை கொடுக்கவும் முயற்சிப்பேன். நான் அவருடைய பந்துகளுக்கு ரியாக்சன் கொடுத்து ரன்களை குவிக்க முயற்சிப்பேன். ஏனெனில் மிகவும் சிறந்த பவுலரான அவர் உங்களை ரன்கள் குவிக்க விடமாட்டார். உண்மையில் சிறந்த பவுலர்கள் எப்போதும் எதிரணி பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விட மாட்டார்கள்”

இதையும் படிங்க: எங்க வந்தாலும் டேஞ்சர் தான்.. பேசாம அங்க விளையாடுங்க.. ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

“அதே போல சிறந்த பேட்ஸ்மேன்கள் எப்போதும் சிறந்த எதிரணி பவுலர்களை நன்றாக பந்து வீச விட மாட்டார்கள். இப்படித்தான் நான் பும்ராவை அணுகுவேன்” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டி அடிலெய்ட் நகரில் பகல் இரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் வெல்வதற்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

- Advertisement -