எங்க வந்தாலும் டேஞ்சர் தான்.. பேசாம அங்க விளையாடுங்க.. ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

ravi shastri
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடிய 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்து குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணிக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

இதை அடுத்து நவம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் போட்டியில் விளையாடாத ரோகித் சர்மாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ராகுல் 77 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ரோஹித் பேட்டிங்:

எனவே அவர்களை இரண்டாவது போட்டியில் பிரிக்காமல் ரோகித் சர்மா 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் விளையாடாததால் 2வது போட்டியில் சவாலை சந்திப்பார் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணி இளமை மற்றும் அனுபவம் மிகுந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. எனவே ஓப்பனிங் அல்லது மிடில் ஆர்டரில் விளையாடுவது ரோகித் சர்மாவின் விருப்பம். ஆஸ்திரேலியா என்று வரும் போது எங்கே விளையாடினால் எதிரணிக்கு ஆபத்தாக இருப்போம் என்பதை தெரிந்திருக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா அனுபவத்தையும் கொண்டுள்ளார்”

- Advertisement -

சாஸ்திரி அட்வைஸ்:

“எனவே ஆஸ்திரேலியா எங்கே விரும்பாதோ அந்த இடத்தை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அணியின் தலைவரான அவர் அதை தைரியமாக செய்ய வேண்டும். என்னைக் கேட்டால் ராகுல் தொடர்ந்து துவக்க வீரராக தொடர வேண்டும். ஏனெனில் ரோகித் சர்மா சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதிக நேரத்தை செலவிடவில்லை. அதனாலேயே அவர் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட வேண்டிய நிலைமையில் இருந்தார்”

இதையும் படிங்க: விக்கெட்ஸை விடுங்க.. மெக்ராத், ஆம்ப்ரோஸ் மாதிரி பும்ரா இதுல இந்தியாவின் மகத்தான பவுலர்.. பாண்டிங் பாராட்டு

“ஆனால் நாம் அதே பேட்டிங் வரிசையை தொடர வேண்டும். அதனால் ரோகித் 5 அல்லது 6வது இடத்தில் விளையாட வேண்டும். கடந்த 10 – 15 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடியதிலேயே இந்த இந்திய அணி தான் அனுபவத்தின் அடிப்படையில் வலுவானது என்று நான் சொல்வேன். சுப்மன் கில், ரோஹித் ஃபிட்டாக இருந்தால் படிக்கல், ஜுரேலுக்கு பதிலாக விளையாட வேண்டும். ஆனால் பந்து வீச்சு வரிசையை நான் மாற்றாமல் அப்படியே தொடர்வேன்” என்று கூறினார்.

Advertisement