- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதை செஞ்சா ஃபைனலில் இந்தியாவை மண்ணை கவ்வ வைக்கலாம்.. தெ.ஆ அணிக்கு பாண்டிங் ஆலோசனை

பார்படாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் இந்தியாவைப் போலவே தென்னாப்பிரிக்காவும் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் ஃபைனலுக்கு வந்துள்ளது.

சொல்லப்போனால் கடந்த காலங்களில் செமி ஃபைனலில் அதிக தோல்விகளை சந்தித்த தென்னாப்பிரிக்கா வரலாற்றிலேயே முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த முதல் வாய்ப்பிலேயே இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது. மறுபுறம் தென்னாபிரிக்காவை வீழ்த்தி கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை உடைக்கும் லட்சியத்துடன் இந்தியா போராட உள்ளது.

- Advertisement -

பாண்டிங்கின் அட்வைஸ்:
இந்நிலையில் ஃபைனலை மற்றொரு போட்டியாகவே பார்ப்பதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால் நீங்கள் அப்படி நினைக்காமல் எதையும் அதிகமாகவும் முயற்சிக்காமல் ஃபைனலில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினால் இந்தியாவை மண்ணை கவ்வ வைக்கலாம் என்று தென்னாப்பிரிக்காவுக்கு ரிக்கி பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

2003 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2007 உலகக் கோப்பையையும் கேப்டனாக வென்ற அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “நிறைய அணிகள் இது சாதாரணமான மற்றொரு போட்டி என்று கூறுகின்றனர். அப்படி சொலவதால் இது எவ்வளவு பெரிய அழுத்தமான போட்டி என்பதை மறைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதை செய்வது நல்லதல்ல”

- Advertisement -

“எனவே ஃபைனலில் என்ன அழுத்தம் இருக்குமோ அதை தழுவுவது நல்லது. தென்னாப்பிரிக்க வீரர்கள் இதற்கு முன் ஃபைனலில் விளையாடியதில்லை. எனவே ஃபைனலுக்கு முன்பாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நீங்கள் எப்போதும் போல் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தென்னாப்பிரிக்கா இதுவரை தோல்வியை சந்திக்காமல் ஃபைனலுக்கு வந்துள்ளது”

இதையும் படிங்க: விராட் கோலி, ரோஹித் சர்மா மட்டுமில்ல.. 3 ஆவதா இவருக்கும் இது கடைசி போட்டியாக இருக்கலாம் – விவரம் இதோ

“எனவே அவர்கள் எதையும் மாற்ற வேண்டியதில்லை. எதையும் கடினமாக முயற்சிக்க வேண்டியதில்லை. மாறாக ஃபைனல் நாளில் தங்களுக்குத் தாங்களே அவர்கள் சிறந்த அணியாக செயல்பட வேண்டும். அவர்களுக்கான வெற்றி வாய்ப்பை வழங்கும். அப்படி செய்தால் அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் பார்படாஸ் நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போட்டியின் முடிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -