ஐ.பி.எல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடனா அவங்களுக்கு தான் பிளஸ் – ரிக்கி பாண்டிங் கருத்து

Ponting
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது இங்கு வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீதமுள்ள 31 போட்டிகளை இரண்டாவது கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது அதன்படி இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி விரைவில் துவங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தற்போது இந்த தொடருக்காக தயாராகி வருகின்றன.

IPL

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் கம்மின்ஸ், வார்னர் உட்பட பல முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வங்கதேச வீரர்களும் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதன் காரணமாக விலகியுள்ளனர். இதனால் பல நட்சத்திர வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை உள்ளது.

ஆனால் சர்வதேச போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டதால் பல மாதங்கள் வீரர்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு வரப்பிரசாதம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Aus-ipl

தற்போது 3-4 மாதங்களாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகமான கிரிக்கெட் விளையாடவில்லை இதன் காரணமாக அவர்கள் மீண்டும் உலகக் கோப்பை டி20 தொடருக்கு தயாராகும் வகையில் இந்த ஐபிஎல் தொடர் நிச்சயமாக உங்களுக்கு கைகொடுக்கும். மேலும் இந்த ஐபிஎல் தொடர் முடிந்து அங்கேயே உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதனால் ஐபிஎல் தொடர் ஒரு சிறந்த தயார்படுத்துதல் தொடராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.

aus

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் 17 வரை டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement