- Advertisement -
இந்திய கிரிக்கெட்

யார் சொன்னது ! இந்திய டெஸ்ட் கேப்டனாக இவர் முழு தகுதியானவர் – ரிக்கி பாண்டிங் ஆதரவு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியில் இருந்து திடீரென விலகியது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பொறுப்பேற்போது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை தனது அதிரடி மற்றும் ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ராஜநடை போட வைத்தார்.

அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல சரித்திர வெற்றிகளை பெற்றுதந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக மகத்தான சாதனையுடன் விடை பெற்றுள்ளார். ஏற்கனவே ஒரு உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற விமர்சனங்களுக்கு உள்ளான அவர் 2019க்கு பின் சதம் அடிக்க முடியாமல் பேட்டிங் செய்து வரும் மோசமான கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இனி இந்த அணியில் சாதாரண வீரராக விளயாட துவங்கி உள்ளார்.

- Advertisement -

ரோஹித் வேண்டாம்:
இவ்வேளையில் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக ஏற்கனவே முழுநேர வெள்ளை பந்து கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள அனுபவ வீரர் ரோகித் சர்மா அறிவிக்கப்படுவார் என தெரிகிறது. விராட் கோலி அளவுக்கு இல்லை என்றாலும் தற்போதைய நிலைமையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

இருப்பினும் 34 வயதை கடந்துள்ள ரோகித் சர்மாவுக்கு பதில் இந்தியாவின் வருங் காலத்தை கருத்தில் கொண்டு கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள். ஏனெனில் விராட் கோலி போல பிட்டாக இல்லாத காரணத்தால் அடிக்கடி காயம் அடைந்து விடக்கூடிய ரோகித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க கூடாது என முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட சில வீரர்கள் கூறியுள்ளார்கள்.

- Advertisement -

ரோஹித் தகுதியானவர் :
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக ரோகித் சர்மா தகுதியானவர் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த உலகின் மகத்தான கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஐசிசி அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற போது நானும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தேன். அந்த சீசனில் என்னை கேப்டனாக விளையாட வைக்க அந்த அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் ஒரு சில போட்டிகளில் நான் சிறப்பாக விளையாட தவறியதால் வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கும் வண்ணம் அதிலிருந்து விலகினேன். அந்த சமயத்தில் அணி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோர் அடுத்த கேப்டன் பற்றிய கருத்தை என்னிடம் கேட்டார்கள். அப்போது வேறு சில வீரர்களின் பெயர்களை பயிற்சியாளர்கள் பரிந்துரைத்தார்கள். ஆனால் இளம் வீரராக இருந்த ரோகித் சர்மா தான் அந்த இடத்திற்கு மிக சரியானவர் என நான் தெளிவாக இருந்தேன்”

- Advertisement -

என தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங் கடந்த 2013ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்திலேயே இளம் வீரராக இருந்த ரோகித் சர்மா வருங்காலத்தில் மிகச் சிறந்த கேப்டனாக வருவார் என அப்போதே கணித்ததாக அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

தரமான கேப்டன் :
“அந்த தருணத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதே அனைவரின் கேள்விக்கும் பதிலாகும். அவர் ஒரு மிகச் சிறந்த கேப்டன் என்பதை சில சமயங்களில் இந்தியாவுக்காக இதற்கு முன் கேப்டன்ஷிப் செய்தபோதும் நிரூபித்துள்ளார். மேலும் கடந்த 2 – 3 வருடங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பங்கை பார்த்த பின்னும் அவர் மீது விமர்சனங்கள் எழுவது கடினமான ஒன்றாகும். இந்த காலகட்டத்தில் மற்றவர்களைவிட அவர் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு ஒரு மிகச்சிறந்த வெள்ளை பந்து வீரராக உள்ளார் என புரிந்து கொள்ள வேண்டும்” என இது பற்றி மேலும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அவரை போய் விராட் கோலியுடன் கம்பேர் செய்வது என்ன நியாயம் – முகமது ஷமி ஆதங்கம்

ஐபிஎல் தொடரில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கேப்டன்ஷிப் செய்து வரும் ரோகித் சர்மா அந்த அணிக்கு கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதன் காரணமாக அவ்வபோது கிடைத்த இந்திய வெள்ளை பந்து கேப்டன் பதவியில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபித்த போதிலும் அவர் மீது எழுப்பப்படும் கேள்விகள் வேடிக்கையாக உள்ளதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by