பவுலிங் போடுவது போன்று வித்தியாசமான த்ரோ மூலம் ரன்அவுட் – வைரலாகும் வீடியோ

Bbl

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக்பாஸ் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பேர்த் ஸ்காட்ச்சர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முதலில் ஆடிய அடிலைட் அணி 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் 198 ரன்களை குவித்தது.

அதன்பிறகு 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அந்த அணி 183 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடிலெய்டு அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அந்த அணியின் துவக்க வீரர் ரிச்சர்ட்சன் செய்த அவர் ரன் அவுட் மூலம் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் சதம் அடித்து இருந்தால் அவர் அதிக ரன்கள் குவித்து இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அபாரமான ரன்அவுட் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த இரண்டு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ரிச்சர்ட்சன் பந்தை ஓடிவந்து விரைவாக எடுத்து பௌலிங் போடுவது போன்று பந்தை துல்லியமாக விக்கெட் கீப்பரிடம் த்ரோ அடித்தார். அந்த த்ரோ மிக துல்லியமாக ஸ்டம்பை ஒட்டியபடி விக்கெட் கீப்பர் கைகளுக்கு சென்றதால் இந்த ரன்அவுட் சாத்தியமானது.