நான் விளையாடும்போது இதுபோன்ற ஷாட்டை விளையாடி இருப்பேன் – கோலியின் பவுண்டரி நினைத்து பிரமித்த ரிச்சர்ட்ஸ் – வைரல் வீடியோ

Kohli-1
- Advertisement -

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 99 பந்துகளுக்கு 114 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்து, தொடரையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கோலி கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த போட்டியின் 22வது ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர் ஓவரில் கோலி அடித்த கவர் டிரைவ்பவுண்டரி ஒன்றினைவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழ்ந்து தள்ளினார். அதாவது கால் திசையில் வந்த பந்தினை கோலி அபாரமாக ஆப் சைடில் தூக்கி அடித்து பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அவ்வாறு கோலி அடிக்கும் போது தன் பாடி ஷேப்பை இழக்காமல் அடித்து விட்டு அதன் பின்னர் மைதானத்தின் இடது புறமாக ஓடினார்.

அந்த ஷாட்டை ரசித்த ரிச்சர்ட்ஸ் பவுண்டரி அடிக்கும் வரை கோலியின் பாடி லாங்குவேஜ் சிறப்பாக இருந்தது. பவுண்டரி அடித்த பின்னர் தனது ஷேப்பை இழந்தார். என்ன ஒரு அருமையான பவுண்டரி இது நான் விளையாடும் பொழுது இது போன்ற ஷாட்டுகளை விளையாடியதில் பெருமை கொள்கிறேன். கோலியிடம் மட்டும் தான் இதுபோன்ற ஷாட்டுகளை பார்க்கிறேன் என்று ரிச்சர்ட்ஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement