- Advertisement -
ஐ.பி.எல்

எனக்கு அடுத்து ஐபிஎல் ஏலத்தை நடத்துபவர் ஒரு இவர்களாக தான் இருக்கனும் – மனம் திறக்கும் ரிச்சர்ட் மாட்லி

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களூருவில் இன்று கோலாகலமாக துவங்கியது. இவ்வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு 2018 பின் முதல்முறையாக இம்முறை மெகா அளவில் ஏலம் நடைபெறுகிறது. பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 590 வீரர்கள் பங்கு பெற உள்ளனர். இதில் தரமான வீரர்களை கண்டறிந்து பல கோடி ரூபாய்களை செலவு செய்து தங்கள் அணிக்கு வாங்க அனைத்து அணிகளும் கடும் போட்டி போட உள்ளன.

ஐபிஎல் ஏலம்:
இந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிகபட்சமாக அனைத்து அணிகளையும் சேர்த்து 217 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளது. எனவே இந்த 217 வீரர்களை வாங்குவதற்கு அனைத்து 10 அணிகளிடமும் 561.5 கோடிகள் உள்ளது. இதில் இன்று நடைபெறும் முதல் நாள் ஏலத்தில் 590 வீரர்களில் இருந்து 169 வீரர்களில் பெயர்கள் மட்டும் ஏலத்தில் அழைக்க படவுள்ளார்கள். இதில் குறிப்பாக ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, டிரென்ட் போல்ட், குயின்டன் டி காக், பாப் டு பிளேஸிஸ், பட் கமின்ஸ், ஷ்ரேயஸ் ஐயர், காகிஸோ ரபாடா, டேவிட் வார்னர் போன்ற நட்சத்திர வீரர்கள் முதலாவதாக ஏலத்தில் போட்டி போட உள்ளார்கள்.

- Advertisement -

ஐபிஎல் ஏலமும் அதில் பங்கேற்கும் வீரர்களும் அவர்களுக்காக செலவழிக்கும் பல கோடி ரூபாய் பணமும் எந்த அளவுக்கு ரசிகர்களிடம் புகழ்பெற்றுள்ளதோ அதே அளவுக்கு இந்த ஏலத்தை தொகுத்து வழங்கிய “ரிச்சர்ட் மாட்லி” ஐபிஎல் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவர் என கூறலாம். “ஒரு தரம், 2 தரம், ஏலத்தில் எடுக்கப்பட்டார்” என ஒரு வீரர் ஏலம் போகும்போது அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஐபிஎல் ரசிகர்களின் மனதில் என்றும் அழியாத ஒன்றாக உள்ளது.

ரிச்சர்ட் மாட்லி:
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட முதல் சீசனில் நடந்த ஏலம் முதல் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலம் வரை நடந்த 11 ஐபிஎல் ஏலங்களில் வீரர்களின் பெயரை உச்சரித்து ஐபிஎல் ஏலத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தவர் தான் ரிச்சர்ட் மாட்லி ஆவார். அதன்பின் கடந்த 2018க்கு பின் ஹக் எட்மேட்ஸ் தற்போதைய ஐபிஎல் ஏலத்தை நடத்துபவராக உள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் மாட்லி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் லெவல் – 2 அம்பயராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தை முன்னிட்டு நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு சில கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடியாமல் இருப்பதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்த பதில் பின்வருமாறு.

“கண்டிப்பாக. ஐபிஎல் ஏலம் எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. வருடத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே நிகழ்ந்தாலும் அது என்னை மிகவும் புகழ் படுத்தியது. காலப்போக்கில் என்னை “சுத்தியல் மனிதர்” என அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் பங்காற்றியது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எங்களது ஊரில் நான் தெருவில் நடந்து போகும்போது பலர் என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னுடன் பேச விரும்புவதுடன் செல்பி எடுக்க விரும்புகிறார்கள்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

- Advertisement -

இந்தியராக இருக்க வேண்டும்:
2018க்கு பின் என் ஐபிஎல் ஏலத்தை நடத்த ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு ரிச்சர்ட் மாட்லி பதிலளித்தது பின்வருமாறு. “கடந்த 2018 ஐபிஎல் ஏலத்தை வெற்றிகரமாக நடத்தி விட்டு நான் இங்கிலாந்து திரும்பினேன். வழக்கமாக ஐபிஎல் ஏலத்தை நடத்துவதற்கு ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் பிசிசிஐ எனக்கு அழைப்பு விடுக்கும். ஆனால் 2018க்கு பின் எனக்கு அழைப்பு வரவில்லை. அதன் பின் தான் மிஸ்டர் ஹக் எட்மேட்ஸ் ஐபிஎல் ஏலத்தை நடத்துபவராக அறிவிக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன்.

இதையும் படிங்க : டக் அவுட் ஆவதிலும் இப்படி ஒரு சாதனையா? சச்சினுக்கு அடுத்து விராட் கோலிதான் – டாப் 4 லிஸ்ட் இதோ

இருப்பினும் ஐபிஎல் ஏலங்களில் நான் பங்கேற்றபோது எந்த தவறும் செய்யாத காரணத்தால் எதற்காக என்னை நீக்கினார்கள் என்ற காரணத்தை இதுவரை பிசிசிஐ என்னிடம் தெரிவிக்கவில்லை. இப்போதும்கூட ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்தார். அத்துடன் தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் தொடர்பில் உள்ளீர்களா, அடுத்த ஐபிஎல் ஏலதாரராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு. “ஐபிஎல் ஏலத்துக்காக எப்போதுமே நான் தயார். இல்லை என்று கூற மாட்டேன்.

இருப்பினும் எனது சொந்த கருத்து என்னவென்றால் ஐபிஎல் ஏலத்தை நடத்துபவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். அவர் இந்தியா அல்லது இந்தியாவை சார்ந்த ஒருவராக இருக்க வேண்டும்” என கூறிய அவர் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒருவர் ஐபிஎல் ஏலத்தை நடத்துவதைவிட இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாக இருக்கும் ஐபிஎல் ஏலத்தை ஒரு இந்தியரே நடத்துவது சிறப்பாக இருக்கும் என ரிச்சர்ட் மாட்லி கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -
Published by