12 சிக்ஸ்.. 2011 உ.கோ ரெய்னா போல மாஸ் காட்டிய ரிச்சா கோஸ்.. கேப்டனை முந்தி உலக சாதனை சமன்

- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. நவி மும்பையில் நவம்பர் இரண்டாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 299 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை 246 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் மகளிர் கிரிக்கெட்டின் புதிய உலக சாம்பியனாக இந்தியா சாதனை படைத்தது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87, ஸ்மிருதி மந்தனா 45, தீப்தி சர்மா 58, ரிச்சா கோஸ் 34 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.

- Advertisement -

ரெய்னா போல அசத்திய ரிச்சா:

பந்து வீச்சில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். முன்னதாக இத்தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு அனைத்து வீராங்கனைகளும் முக்கிய பங்காற்றினார்கள். அதில் விக்கெட் கீப்பர் வீராங்கனை ரிச்சா கோஸ் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு சுரேஷ் ரெய்னா எப்படி பங்காற்றினாரோ கிட்டத்தட்ட அதே பங்காற்றினார் என்று சொல்லலாம்.

ஏனெனில் 2011 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா முக்கிய ரன்களை அதிரடியாக அடித்தது வெற்றிக்கு காரணமாக இருந்ததாக பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியிருந்தார். அதே போல 2025 மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் ரிச்சா 26 (16) ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 34 (24) ரன்கள் அடித்த அவர் ரெய்னாவை பிரதிபலிக்கும் வகையில் விளையாடி வெற்றியில் பங்காற்றினார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

உலக சாதனை சமன்:

அது போக 2025 மகளிர் உலகக் கோப்பையில் அவர் 12 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக ஒரு மகளிர் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் ரிச்சா படைத்துள்ளார். இதற்கு முன் 2017 உலகக்கோப்பையில் தற்போதைய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 11 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: அர்ஷ்தீப் சிங் விளையாடுனாலே விக்கெட் எடுக்குறாரு.. ஆனா அவரை ஏன் இப்படி பண்றீங்க? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

அத்துடன் ஒரு மகளிர் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் ரிச்சா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2013இல் வெஸ்ட் இண்டீஸின் தியோந்திர டோட்டின் மற்றும் 2017இல் தென்னாபிரிக்காவின் லிஸ்லே லீ ஆகியோரும் 12 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள். இது போக மகளிர் உலகக் கோப்பையில் 8வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் (94) அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியிலேயே படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement