மரியாதை என்பது கேட்டு வாங்குவதில்லை, இந்தியாவை வம்பிழுத்த ரமீஸ் ராஜாவுக்கு தமிழக வீரர் பதிலடி இதோ

Ramiz Raja Sourav Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடரை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதிகட்டமாக தயாராகி வருகின்றன. இத்தொடரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. ஏனெனில் எல்லைப் பிரச்சனை காரணமாக அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து விட்டு இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதுகின்றன.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

அதைவிட கடந்த 1992 முதல் உலக கோப்பையில் களமிறங்கிய அத்தனை போட்டிகளிலும் பாகிஸ்தானை தொடர்ச்சியாக தோற்கடித்த இந்தியா வீரநடை போட்டது. இருப்பினும் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதி புதிய சரித்திரம் படைத்தது. அந்த நிலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அதே துபாயில் லீக் சுற்றில் வென்றாலும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் தோற்ற இந்தியா பைனலுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

வம்பிழுக்கும் ரமீஸ்:
அதனால் எஞ்சியிருக்கும் அந்த பழைய கணக்கை இந்த உலக கோப்பையில் திருப்பிக் கொடுக்க இந்தியா காத்திருக்கும் நிலையில் கடந்த முறை போலவே இம்முறையும் நாங்கள் வெல்வோம் என்று பாகிஸ்தான் சவால் விட்டு வருகிறது. அதைவிட இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 4 – 3 (7) என்ற கணக்கில் டி20 தொடரில் தோற்ற போது வரலாற்றில் ஜாம்பவான்கள் நிறைந்த பாகிஸ்தான் அணியால் கூட தோற்கடிக்க முடியாத மில்லியன் டாலர் டீம் இந்தியாவை தற்போதைய அணி தோற்கடித்ததை புரிந்துகொள்ளுங்கள் என்று சம்பந்தமின்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவை இழுத்து அந்நாட்டு வாரிய தலைவர் ரமீஷ் ராஜா சமீபத்தில் பேசியிருந்தார்.

Ramiz-raja

அதைவிட 1992 முதல் தொடர்ச்சியாக வென்று வந்ததால் பாகிஸ்தானை மதிக்காத இந்தியா 2021இல் முதல் முறையாக தங்களிடம் தோற்ற பின் இப்போது தான் மதிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மதிப்பு என்பது வெற்றி தோல்வியிலிருந்து வராது என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு எதிரணியாக இந்தியா எப்போதுமே பாகிஸ்தானை மதித்து வருவதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் (செய்தியாளர்) சொல்லும் வரை அவர் (ரமீஸ் ராஜா) இப்படி கூறினார் என்பதே எனக்கு தெரியாது. என்னைக் கேட்டால் இது விமர்சனத்தை சமாளிப்பதற்காக அவர் கூறியதாக இருக்கலாம்”

- Advertisement -

“ஆனால் இது கிரிக்கெட்டை மட்டும் பொருத்தது. இதில் அரசியல் ரீதியான பதற்றம் இரு அணிகளுக்கிடையேயும் இருக்கும். இது மிகப்பெரிய போட்டியாகும். இது இரு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்களுக்கு மிகப்பெரிய கவுரவமாகும். ஆனால் யார் என்ன சொன்னாலும் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது ஒரு அங்கம் என்பதை நீங்கள் யாரும் புரிந்து கொள்ள மாட்டீர்கள். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது மிகக் குறைந்த இடைவெளியில் இருக்கும்”

“எனவே அவர் (ரமீஸ் ராஜா) கூறுவது போல எதிரணியை மதிப்பது என்பது வெற்றி அல்லது தோல்வியில் வராது. அது உங்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொருத்து வரும். இருப்பினும் நாங்கள் எப்போதுமே பாகிஸ்தானை ஒரு எதிரணியாக மதித்தே வருகிறோம்” என்று கூறினார். அதாவது மதிப்பு, மரியாதை என்பது வெற்றி – தோல்வி என்பதைத் தாண்டி நீங்கள் எவ்வாறு உங்களை உருவாக்கி எந்த வகையில் நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே வரும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

அந்த வகையில் எங்களை தோற்கடித்து மரியாதையை கேட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை என்று ரமீஸ் ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் அவர் அப்போதும் இப்போதும் எப்போதும் இந்தியா ஒரே மாதிரியாக பாகிஸ்தானுக்கு மரியாதை கொடுத்து வருவதாகவும் கூறினார். அவர் கூறுவது போல பாகிஸ்தானை எப்போதும் எதிரியாக இந்தியா மதிக்கும் நிலையில் அவர்கள் தான் “பணக்கார இந்தியாவை தோற்கடித்து விட்டோம், சாஹீன் அப்ரிடி இல்லாமல் தப்பித்து விட்டார்கள்” என்று விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement