சி.எஸ்.கே வீரர் நெகிடிக்கு பதிலாக சென்னை அணியில் இணையப்போவது இவர்தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Lungi
- Advertisement -

இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த 12வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கான சென்னை அணி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

KKRvCSK_

- Advertisement -

கடந்த 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது. அதனை அடுத்து இந்த ஆண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி உத்வேகம் காட்டும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணிக்கு ஒரு பின்னைடைவு ஏற்பட்டுள்ளது. அது யாதெனில் சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லுங்கி நெகிடி தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக சென்னை அணியில் மார்க் வுட் அல்லது டேவிட் வில்லி ஆகிய இருவரில் ஒருவர் அணியில் விளையாடுவார்கள் என்று சென்னை அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லுங்கி நெகிடி கடந்த ஆண்டு சென்னை அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mark Wood

மார்க் வுட் மற்றும் டேவிட் வில்லி ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியை சேர்ந்த வீரர்கள் ஆவர். கடந்த ஆண்டு மார்க் வுட் சென்னை அணிக்காக சில ஒருபோட்டியில் ஆடி அதிக அளவு ரன்களை விட்டுக்கொடுத்ததால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. ஆனால், தற்போது அவர் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக பந்துவீசி வருவதால் அவருக்கு சென்னை அணி முன்னுரிமை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement