
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. அப்போட்டி ஜூன் 20ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தங்களுடைய கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள்.
அதற்கான காரணம் என்னவெனில் முன்னாள் இந்திய வீரர் டேவிட் ஜான்சன் ஜூன் 20ஆம் தேதி இயற்கை எய்தினார். கர்நாடகாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அவர் இந்திய அணிக்காக கடந்த 1996ஆம் ஆண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 1990களில் ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே போன்ற நட்சத்திரங்களுடன் கர்நாடக மாநில அணியில் அவர் முக்கிய பவுலராக வலம் வந்தார்.
இந்திய அணி இரங்கல்:
அந்த சூழ்நிலையில் ஓய்வுக்கு பின் கர்நாடகாவில் வசித்து வந்த அவர் ஜூன் 20ஆம் தேதி தன்னுடைய குடியிருப்பு பகுதியில் இயற்கை எய்தியதாக அம்மாநில வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதியில் நான்காவது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து இயற்கையை எரியதாக கர்நாடகா மாநில வாரியம் அறிவித்துள்ளது.
இத்தனைக்கும் வெறும் 52 வயது மட்டுமே நிரம்பிய அவர் துரதிஷ்டவசமாக தவறி விழுந்து இயற்கையை எழுதியுள்ளார். 1996இல் முதல் முறையாக துவங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அறிமுகமான டேவிட் ஜான்சன் கடைசியாக அதே வருடம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பன் நகரில் இந்தியாவுக்காக விளையாடினார்.
தனது கேரியரில் ஒருமுறை 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசிய அவர் அந்த காலகட்டத்தில் அதிரடியான வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டார். அதனால் அவருக்கு கௌரவமும் அஞ்சலியும் செலுத்தும் வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தங்களுடைய கையில் கருப்பு பட்டை அணிந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடினர்.
இதையும் படிங்க: இந்தியா 62/3 டூ 181 ரன்ஸ்.. ஆட்டம் காட்டிய ரஷித் கானுக்கு எதிராக 102 ரன்ஸ் விளாசி.. சூரியகுமார் தனித்துவ சாதனை
மேலும் பிசிசிஐ சார்பில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் டேவிட் ஜான்சன் இயற்கையை எழுதிய செய்தியை கேட்டு சோகமடைந்துள்ளதாக கௌதம் கம்பீர், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ட்விட்டரில் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, மயங் அகர்வால், டபிள்யூவி ராமன், சேவாக், அஸ்வின் உள்ளிட்ட போன்ற முன்னாள் இந்நாள் இந்திய வீரர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.