இந்தியா 62/3 டூ 181 ரன்ஸ்.. ஆட்டம் காட்டிய ரஷித் கானுக்கு எதிராக 102 ரன்ஸ் விளாசி.. சூரியகுமார் தனித்துவ சாதனை

IND vs AFG
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. அப்போட்டி ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் சிராஜுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய கேப்டன் ரோஹித் சர்மா 8 (13) ரன்களில் பரூக்கி வேகத்தில் அவுட்டானார். அதனால் மறுபுறம் விராட் கோலி நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்து 4 பவுண்டரிகளை பறக்க விட்ட ரிஷப பண்ட் 20 (11) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அசத்திய சூர்யகுமார்:
போதாகுறைக்கு அவரை அவுட்டாக்கிய ரசித் கான் அடுத்த சில ஓவரில் விராட் கோலியையும் 24 (24) ரன்களில் காலி செய்ததால் இந்தியா 62/3 என தடுமாறியது. அதோடு நிறுத்தாத அவர் அதற்கடுத்த ஓவரில் சிவம் துபேவை 10 (7) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் 90/4 என இந்தியா தடுமாறிய வேளையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடி கை கொடுத்தார்.

அதை பயன்படுத்தி தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் 5வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அழுத்தத்தை உடைத்தார். அந்த வகையில் 5 பவுண்டரி 3 சிக்சரை பறக்கவிட்ட அவர் அரை சதமடித்து 53 (28) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியையும் சேர்த்து ரசித் கானுக்கு எதிராக இதுவரை சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 64 பந்துகளில் 102* ரன்கள் எடுத்துள்ளார்.

- Advertisement -

ஆனால் ஒரு முறை கூட அவுட்டானதில்லை. இதன் வாயிலாக ரஷித் கானுக்கு எதிராக ஒரு முறை கூட அவுட்டாகாமல் 100+ டி20 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான பெயரை சூரியகுமார் பெற்றுள்ளார். இதற்கு முன் உலக அளவில் ரசித் கானுக்கு எதிராக டார்சி ஷார்ட் 113* (76), ஷேன் வாட்சன் 108* (83) ரன்களை அவுட்டாகாமல் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்த காரணத்தால் வாபஸ் வாங்கமுடியாது.. மறுபடியும் சொல்றேன் விராட் கோலி ஃசெல்பிஷ் தான்.. ஹபீஸ் அதிரடி

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவும் 32 (24) ரன்களில் போராடி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜடேஜா 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அக்சர் பட்டேல் 12 (6) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 181/8 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான், ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement