ஆசியக் கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் பெஞ்சில் அமரும் வாய்ப்பை கூட பெறவில்லை. இத்தனைக்கும் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் 604 ரன்கள் அடித்து 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து அசத்தினார்.
அத்துடன் 2024 ஐபிஎல், சயீத் முஷ்டாக் அலி கேப்டனாக வென்ற அவர் 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அந்த வகையில் இந்தியாவை டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக தலைமைத் தாங்கும் திறமையை பெற்றுள்ள ஸ்ரேயாஸ் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சுப்மன் கில்லை வைத்து:
ஆனால் அவரை கழற்றி விட்டுள்ள பிசிசிஐ சுப்மன் கில்லை வைத்து பெரிய மாஸ்டர்பிளானை போட துவங்கியுள்ளது என்றே சொல்லலாம். அதற்கான அடிப்படை என்னவெனில் இந்தியாவில் ஸ்பிலிட் கேப்டன்ஷிப் வேலையாகாது என்று எம்எஸ் தோனி போன்ற பலரும் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்சமயத்தில் டி20, ஒருநாள் போட்டிகளுக்கு சூரியகுமார் மற்றும் ரோஹித் சர்மா கேப்டன்களாக உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட பிசிசிஐ சுப்மன் கில்லை புதிய கேப்டனாக அறிவித்தது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த கில் பல சாதனைகள் புரிந்து இந்தியா 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய உதவினார். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் கில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார்.
பிசிசிஐ பிளான்:
அதனால் அவரை ஏற்கனவே ஒருநாள் அணியில் துணைக் கேப்டனாக பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது டி20 அணியில் கேப்டனாக இருக்கும் சூரியகுமார் 34 வயதாகி விட்டார். அதனால் 2026 டி20 உலகக் கோப்பைக்கு பின் அவரால் நீண்ட காலம் கேப்டனாக செயல்பட முடியாது. அதனாலேயே தற்போது கில்லை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது.
இதையும் படிங்க: சுப்மன் கில் திடீரென ஆசிய கோப்பை டி20 கேப்டனாக தேர்ந்தெடுக்கப் பட்டது ஏன்? கேப்டன் சூரியகுமார் பேட்டி
டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரில் குஜராத் கேப்டனாக இருக்கும் கில் 2023 சீசனில் 890 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி வென்று ஓரளவு நன்றாகவே செயல்பட்டுள்ளார். எனவே ரோஹித் மற்றும் சூரியகுமார் விடைபெறும் போது சுப்மன் கில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான இந்திய அணிகளின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவார். அதற்கான அடித்தளத்தையே தற்போது பிசிசிஐ, பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



