அவர் என்ன பண்ணாலும் சரி இந்திய அணியில் விளையாடமாட்டார் – அடம் பிடிக்கும் ரோஹித்

Samson-1

வங்கதேச தொடருக்கான டி20 இந்திய அணியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரரான சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது மீதமுள்ள இரண்டு போட்டியிலும் அவரது வாய்ப்பு சந்தேகமாகவே உள்ளது.

samson 2

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதன்பிறகு 4 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தாலும் இவரை இந்திய அணியில் சேர்க்கவில்லை. மேலும் தற்போது நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் 200 ரன்களை அடித்து அசத்திய நிலையில் அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது இந்த தொடரிலும் சஞ்சு சாம்சன் இடம் இடம் பிடித்தாலும் அணியில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன் ஒரு விக்கெட் கீப்பராக பார்க்கப்படாமல் பேட்ஸ்மேனாகவே பார்க்கப்படுகிறார். ரோகித் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பண்டை விளையாடவைக்கவே விரும்புகிறார்.

Samson

ஏனெனில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முதன்மை விக்கெட் கீப்பராக அவரை தயார் செய்யும் விதமாக இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே சஞ்சு சாம்சன் இந்த தொடரில் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பே கிடைக்காது. பேட்ஸ்மேன் யாரவது ஒருவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பு உள்ளது அது தவிர மற்றபடி ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கிவிட்டு சாம்சன் விளையாட வைக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Pant

பண்ட் விடயத்தில் ரோஹித் உறுதியாக உள்ளதாகவும், அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் விக்கெட் கீப்பராக பண்டே தொடர்வார் என்பதிலும் ரோகித் உறுதியாக உள்ளார் என்று நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதால் சஞ்சு சாம்சன் இந்த தொடரிலும் அணியில் இருந்தாலும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.