தோனியை நினைத்து ரோஹித் கண்ணீர் வடிக்க இதுதான் காரணமா ? – நெகிழவைக்கும் பதிவு

Rohith

நேற்று முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ferguson

நேற்றைய போட்டியில் கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போது தோனி நிச்சயம் அணிக்கு வெற்றியை தேடித்தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அணி 19 ஓவரில் ஒரு சிக்சர் அடித்து விட்டு அதே ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தோனியின் கடைசி ஒருநாள் போட்டி என்பதால் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அவரிடம் காணப்பட்டது. சோகத்துடன் வெளியேறிய துணி கிட்டத்தட்ட அழுதே விட்டார். அவர் அழுது கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய துவக்க அதிரடி வீரரான ரோஹித் தோனி அவுட் ஆகி வெளியேறியபோது அவர் அவுட் ஆகி வருவதனை கண்டு, கடைசி நம்பிக்கையும் வீண்போனது என்று கண்கலங்கியபடி ஓய்வறையில் அழுதபடி நின்றார். தற்போது ரோஹித் கண்ணீர் விடும் இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhoni

ரோஹித் இந்த அளவிற்கு கண்ணீர் வடிக்க காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி ரோஹித் அறிமுகமான காலகட்டத்தில் ஆறாவது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்ய மிகவும் கடினப்பட்டு கொண்டிருந்தார். ஆனாலும் அவரால் கட் ஷாட், புல் ஷாட் மற்றும் டிரைவ் என அனைத்தையும் அடிக்க முடிவதை கவனித்த தோனி அவரின் திறமையை கணித்து அவருக்கு இந்திய அணியில் ஓபன் செய்யும் வாய்ப்பைக் கொடுத்தார்.

Dhoni-2

அதன்பின் ஆட்டம் ஆரம்பித்தது அதன் பிறகு ஏகப்பட்ட சதங்கள் விளாசிய ரோஹித் 3 இரட்டை சதங்களை விளாசி ஏதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தன் வாழ்நாளின் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தோனிக்கு இந்த உலக கோப்பையில் வெற்றியுடன் கோப்பையை அவர் கையில் கொடுத்து வழியனுப்பி நினைத்தார் ரோகித் ஆனால் அது முடியாமல் போன விரக்தியில் நேற்று தோனியை பார்த்தபடி அழுதது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீரர்களும் தோனிக்கு இந்த கோப்பையை கொடுத்து பிரியா விடை கொடுக்க நினைத்ததும் குறிப்பிடத்தக்கது.