முஷ்பிகூர் மைதானத்தில் பாம்பு நடனம் ஆடியதற்கு காரணம் இது தான் !

Mushfiqur
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.இலங்கை – வங்கதேச அணிகளிடையே நடைபெற்ற மூன்றாவது லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

rahim1

- Advertisement -

215 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 19.4 ஓவர்களிலேயே 5விக்கெட்டுகள் இழப்பில் 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

முஷ்பிகூர் ரஹீம் அபாரமாக விளையாடி 72 ரன்கள் எடுத்து வங்கதேச அணியின் வெற்றியை உறுதிசெய்து இலங்கையை துவம்சம் செய்தார்.வங்கதேச வெற்றியை முஷ்பிகூர் ரஹீம் மைதானத்திலேயே பாம்பு டான்ஸ் ஆடி கொண்டாடி மகிழ்ந்தார்.

srilanka

அதற்கான காரணம் என்னவென்றால், முஷ்பிகூர் ரஹீம் பேட்டிங் சேந்து கொண்டு இருந்தபொழுது, இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணாதிலகா அவரை கிண்டல் செய்யும் விதமாக மைதானத்தில் பாம்பு நடனம் ஆடினார். இதனால் கோபம் அடைந்த முஷ்பிகூர் ரஹீம் வெற்றி பெற்ற பின், பழிக்கு பழி வாங்கும் விதமாக அதேபோல் பாம்பு நடனம் ஆடினார்.

அவரது நடணம் தற்போது வைரலாகி வருகின்றது.

rahim

Advertisement