சிவப்பு நிற தொப்பியுடன் களமிறங்கிய இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் – காரணம் இதுதான்

Eng-vs-Aus
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் தடைப்பட்டது. பிறகு டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது.

eng

- Advertisement -

இந்த போட்டியில் எப்போதும் இல்லாத வகையில், இரு அணி வீரர்களும் சிவப்பு நிற தொப்பி அணிந்து களமிறங்கினார்கள். வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சியின் எண்களும் சிவப்பு நிறத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த போட்டியில் சிவப்பு நிறத்துடன் கலந்துகொண்ட காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நடத்தும் அறக்கட்டளை சார்பில், நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று ஆஷஸ் தொடர் நடத்தும் இங்கிலாந்து நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aus

இங்கிலாந்து வீரர் ஸ்ட்ராஸின் மனைவி ரூத், கடந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் காலமானர். அவரது நினைவாக ‘ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை-யை தொடங்கினார் ஸ்ட்ராஸ். இந்த அறக்கட்டளை சார்பாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ட்ராஸ் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement