புதுமுக வீரரான ஆர்ச்சர் முக்கியமான இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் வீச – இதுவே காரணம்

Archer

உலக கோப்பை இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று மோதின.

eng vs nz

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதன் பிறகு ஆட துவங்கிய இங்கிலாந்து அணி, ஐம்பது ஒவேரில் 241 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக மேட்ச் டை ஆனது. அதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

England

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சூப்பர் ஓவரை இந்த உலகக் கோப்பைத் தொடரில் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் வீசினார். மேலும் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரை ஏன் சூப்பர் ஓவரை வீச மோர்கன் அழைத்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

Archer 2

அதன்படி ஆர்ச்சரின் பந்துவீச்சை கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக இருந்ததை நாம் அனைவரும் பார்த்திருப்போம். மேலும் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகம் மட்டுமின்றி அதோடு துல்லியமாகவும் பந்துவீசும் ஆர்ச்சர் இறுதி நேரத்தில் பதற்றமின்றி சிறப்பாக வீசும் திறன் உடையவர் என்பதை புரிந்து கொண்ட மோர்கன் இந்த தொடர் முழுவதும் அவரை சிறப்பாக பயன்படுத்தி உள்ளார்.

Archer 1

இதனைக் கருத்தில் கொண்டே அவரை பந்துவீச அழைத்தால் நமக்கு நிச்சயம் வெற்றி தேடித் தருவார் என்று அவர் மீது நம்பிக்கை வைத்து அவரிடம் சூப்பர் ஓவரை ஒப்படைத்தார். அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் துல்லியமாக பந்துகளை வீசி இங்கிலாந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். வெற்றி பெற்றதும் ஆர்ச்சர் மைதானத்தில் கண்ணீர் விட்டபடி கீழே அமர்ந்தார். பிறகு ஸ்டோக்ஸ் வந்து அவரை சமாதானம் செய்து வெற்றியை பகிர்ந்தார்.

Advertisement