அஷ்வினோட அந்த வலையில் நாங்க சிக்க மட்டோம், இந்தியாவை சாய்க்க திட்டத்துடன் தயார் – இளம் ஆஸி வீரர் அதிரடி பேட்டி

Ashwin Maat renshaw
- Advertisement -

வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதற்கான அணிகளை வரும் பிப்ரவரி மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தீர்மானிக்கவுள்ளது. குறிப்பாக இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது. மறுபுறம் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா பைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது.

இருப்பினும் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியடையாமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த முதல் ஆசிய அணியாக சரித்திரம் படைத்த இந்தியா சமீப காலங்களில் நல்ல பார்மில் உள்ளது.

- Advertisement -

அஷ்வினை எதிர்கொள்ள தயார்:
மறுபுறம் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடந்த 2 தொடர்களாக தங்களது சொந்த மண்ணில் தோல்வியை கொடுத்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்து 2004க்குப்பின் தொடரை வெல்ல முழு மூச்சுடன் போராட உள்ளது. மேலும் இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் எப்போதுமே சுழல் பந்து வீச்சு அதிகமாக எடுபடும் என்பதால் இரு அணிகளும் தலா 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறது.

அதில் இந்திய அணியில் ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து அனுபவிக்க ஸ்பின்னராக திகழும் ரவிச்சந்திரன் அஷ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொதுவாகவே வலது கை பேட்ஸ்மேன்களை விட இடது கை பேட்ஸ்மேன்களை அதிகமாக அவுட்டாக்கி ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ள அஷ்வின் ஆஸ்திரேலிய அணியில் உள்ள கவாஜா, வார்னர், டிராவிஸ் ஹெட், அலெஸ் கேரி, மாட் ரென்ஷா ஆகிய இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அஷ்வின் மற்றும் இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தேவையான திட்டங்களை வகுத்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியில் 5வது விளையாட தேர்வாகியுள்ள இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மாட் ரென்ஷா கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அஷ்வின் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமானவர். அதே சமயம் மிகவும் சாதுரியமாகப் பந்து வீசும் அவரிடம் பல்வேறு வேரியேஷன் உள்ளது. அவர் அதை சிறப்பாக பயன்படுத்தி அச்சுறுத்தலை கொடுப்பார். இருப்பினும் அவரது பந்துகளை நீங்கள் அதிகமாக எதிர்கொண்டால் அவரையே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்”

“எனவே சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் அஷ்வின் மட்டுமல்லாமல் எந்த ஆஃப் ஸ்பின்னரும் இடது கை பேட்ஸ்மேன்க்கு எல்பிடபிள்யு அச்சுறுத்தலை கொடுப்பார்கள். குறிப்பாக அனைவரும் பந்து சுழன்று எட்ஜ் வாங்கி ஸ்லிப் பகுதியில் கேட்ச் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் பந்து சுழலாத போது எல்பிடபிள்யூ ஏற்படலாம். எனவே அதை எதிர்கொள்ள மட்டும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். மேலும் கடந்த சில வருடங்களாக 5வது இடத்தில் விளையாடுவது சுழல் பந்து வீச்சை திறமையாக எதிர்கொள்ள எனக்கு உதவியுள்ளது. அதனால் முன்பை விட தற்போது பல்வேறு சூழ்நிலைகளில் என்னுடைய ஆட்டம் முன்னேறியுள்ளதாக நான் உணர்கிறேன்”

இதையும் படிங்க: நீங்களா முடிவெடுத்தா நாங்க என்ன செய்ய முடியும்? விராட் கோலியின் டி20 கேரியர் பற்றி ராகுல் டிராவிட் நேரடி பதில்

“எங்களிடம் வலுவான அணி இருப்பதால் இம்முறை நாங்கள் இந்தியாவை வலுவாக தள்ளுவதற்கு முயற்சிப்போம். அதே போல் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் அதற்கு தயாராக இருக்கிறேன். எஸ்ஜி பந்து சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதால் நாங்கள் அதை தற்போது நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரின் பயிற்சிக் களத்தில் பயன்படுத்தி பயிற்சி எடுத்து வருகிறோம்” என்று கூறினார். முன்னதாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழும் மார்னஸ் லபுஸ்ஷேனும் அஷ்வினை எதிர்கொள்ள தனித்துவமான திட்டங்களை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement