நீங்களா முடிவெடுத்தா நாங்க என்ன செய்ய முடியும்? விராட் கோலியின் டி20 கேரியர் பற்றி ராகுல் டிராவிட் நேரடி பதில்

Dravid
- Advertisement -

கடந்த 2022 காலண்டர் வருடத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதாரண இரு தரப்பு தொடர்களை வென்று தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வழக்கம் போல லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது. அந்த தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் நட்சத்திர வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் கோபமடைந்த ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்த பிசிசிஐ 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக சீனியர் வீரர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய கிரிக்கெட் அணியை உருவாக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

- Advertisement -

அதனாலேயே 2022 டி20 உலக கோப்பைக்குப் பின் இதுவரை இந்தியா பங்கேற்ற நியூசிலாந்து, இலங்கை டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணி விளையாடியது. அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்து டி20 தொடரிலும் விளையாடப் போகிறது. ஆனால் இந்த 3 தொடர்களிலும் ரோகித் சர்மா அடங்கிய சீனியர்கள் கூட்டத்தில் ஒருவராக விராட் கோலியும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டு வருவது அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் ஆரம்ப முதலே டி20 கிரிக்கெட்டில் சீராக செயல்பட்டு வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்து அடித்து நொறுக்கினார்.

டிராவிட் பதில்:
அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தும் இதர வீரர்களின் சொதப்பலால் இந்தியா தோற்றது. அப்படி சிறப்பாக செயல்பட்டும் விராட் கோலியை டி20 கிரிக்கெட்டில் கழற்றி விட முடிவெடுத்துள்ளது சரியா? என்று நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

VIrat Kohli IND vs PAK

அதற்கு நாங்கள் எப்போது அப்படி சொன்னோம் என்று பதிலளித்த ராகுல் டிராவிட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் அப்படி சொல்லவே இல்லையே. அடுத்ததாக முக்கியமான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்கள் வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே நாங்கள் அதிகப்படியான போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் அடுத்ததாக பார்டர் – கவாஸ்கர் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய அடுத்தடுத்த முக்கிய தொடர்கள் வரவிருக்கிறது”

- Advertisement -

“எனவே கடந்த டி20 உலக கோப்பைக்கு அடுத்ததாக 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தான் இந்த 6 ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் 6 ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி விளையாடியதை நீங்கள் பார்த்தீர்கள். எனவே அவரும் ரோகித் சர்மா போன்ற மேலும் ஒரு சில வீரர்களும் அடுத்ததாக நாங்கள் டி20 தொடரில் விளையாடும் போது ஓய்வெடுப்பார்கள்”

Dravid

“ஏனெனில் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அவர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். எனவே நாங்கள் குறிப்பிட்ட வகையான கிரிக்கெட்டை கருத்தில் கொண்டு தான் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாய்ப்பு கொடுக்கிறோம்” என்று கூறினார். அதாவது இந்த வருடம் 50 ஓவர் உலகக் கோப்பை வருவதால் அதற்கு தயாராகும் வகையில் விராட் கோலிக்கு டி20 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்படுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிண்டலடிச்சதுக்கு மன்னிச்சுடுங்க, பும்ராவை ஓரம் கட்டிய சிராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை – ரசிகர்கள் பாராட்டு

மேலும் அவருடைய டி20 கேரியர் முடிந்ததாக நாங்கள் எப்போதும் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 2023 உலக கோப்பைக்கு பின் 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வேலை துவங்கும் போது மீண்டும் விராட் கோலி அனைத்து டி20 போட்டிகளில் விளையாடுவார் என்று ராகுல் டிராவிட் மறைமுகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement