வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் தென்னாபிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது. ஆனால் மழையால் அந்தப் போட்டி டிராவில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
உண்மையில் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பிருந்தது. குறிப்பாக 4வது இன்னிங்ஸில் கடைசி நாளில் அதிரடியாக விளையாடிய அந்த அணி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 201/5 ரன்கள் இருந்த போது மழை வந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.
இரவு 2 மணிக்கு:
அதனால் மழை வராமல் போயிருந்தால் வென்றிருப்போம் என்று தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக 5வது நாளில் பவுலிங்க்கு சாதகமாக இருந்த குயின் எலிசபெத் மைதான பிட்ச்சில் தங்களுடைய பவுலர்கள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார்கள் என்று பவுமா கூறியிருந்தார். முன்னதாக அப்போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகள் எடுத்த கேசவ் மகாராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் தன்னுடைய நாட்டு அணிக்காக இரவு 2 மணிக்கு எழுப்பி பந்து வீச சொன்னால் கூட மகிழ்ச்சியுடன் சுழல் பந்துகளை வீசுவேன் என்று கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுழல் பந்துகளை வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இரவு 2 மணிக்கு எழுந்து என்னை நீங்கள் பந்து வீசச் சொன்னால் நான் ஆர்வத்துடன் வீசுவேன். அது எனக்கு உத்வேகத்தை கொடுக்கும்”
“அது அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும், இந்த அணியை நல்ல திசைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரிக்கும். அதற்காக தேவைப்பட்டால் நாள் முழுவதும் கூட பந்து வீசுவேன். எந்த வகையான கிரிக்கெட்டில் விளையாட்டினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுகாக நான் முன்னுரிமை கொடுத்து பணிச்சுமையை நிர்வகிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்சம் லைன், லென்த்தை மாற்ற வேண்டும்”
இதையும் படிங்க: தசாப்தம் தாண்டிருச்சு.. கடைசியாக விராட், ரோஹித் எப்போது துலீப் கோப்பையில் விளையாடினார்கள் தெரியுமா?
“அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் என்னால் மணிக்கணக்கில் பந்து வீச முடியும். முதல் போட்டியில் முடிவு கிடைக்காதது ஏமாற்றமாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது கடைசி போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானா நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



