டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த விராட் கோலி – மும்பை அணியில் 2 புதிய மாற்றங்கள்

Rcbvsmi
- Advertisement -

நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான 14 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி உள்ளது. இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்க இரு அணிகளும் போட்டியிடும் என்பதால் போட்டியில் சுவாரசியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mivsrcb

இந்த போட்டியில் சற்று முன் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பிறகு ஆர்சிபி கேப்டன் கோலி பெங்களூரு அணியில் உள்ள மாற்றங்களைப் பற்றி பேசினார்.

- Advertisement -

அதில் அறிமுக வீரர்கள் ஜேமிசன் மற்றும் ராஜட் படித்தார் ஆகியோர் இடம் பெறுகிறார்கள் என்றும் அது தவிர மேக்ஸ்வெல் கிரிஸ்டியன் ஆகியோர் விளையாடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1. விராட் கோலி, 2. ராஜத் படிதார், 3. ஏபிடி, 4. மேக்ஸ்வெல், 5. டேனில் கிறிஸ்டியன், 6. வாஷிங்டன் சுந்தர், 7. கைல் ஜேமிசன், 8. ஹர்ஷல் பட்டேல், 9. முகமது சிராஜ், 10, ஷாபாஸ் அகமது. 11. சாஹல்.

- Advertisement -

maxwell

அதனை தொடர்ந்து மும்பை அணியின் மாற்றம் குறித்து பேசிய ரோஹித் : இறுதிப் போட்டியில் விளையாடிய அணியில் இரண்டு மாற்றங்களை மட்டுமே நாங்கள் செய்துள்ளோம். அதன்படி டிகாக்கிற்கு பதிலாக க்றிஸ் லின் மற்றும் குல்டர் நைலுக்கு பதிலாக மார்கோ ஜான்சன் ஆகி இருவரும் விளையாடுகிறார்கள் என்று ரோஹித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

lynn

மும்பை அணியின் பிளெயிங் லெவன் இதோ :

1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் லின், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. மார்கோ ஜான்சென், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

Advertisement