முக்கிய வீரரை அணியில் இணைத்து சி.எஸ்.கே அணியை எதிர்க்கவுள்ள பெங்களூரு அணியின் பிளேயிங் லெவன் இதுதான்

RcbvsCsk
- Advertisement -

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த தொடரில் அனைத்து அணிகளுமே குறைந்தபட்சம் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இத்தொடரில் மொத்தம் 18 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் டேபிள் டாப்பர்களாக இருக்கும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதவிருக்கின்றன.

- Advertisement -

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கருதப்படுகிறது. ஆனால் பெங்களூர் அணியில் சென்ற போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்ட கேன் ரிச்சார்ட்சனுக்கு பதிலாக டேனியல் சாம்ஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக டெல்லி அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த டேனியல் சாம்ஸை ட்ரேடிங் மூலம் பெங்களூர் அணி வாங்கியிருந்தது.ஆனால் இதுவரை அவருக்கு பெங்களூர் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் கடந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்ட கேன் ரிச்சர்ட்சன், அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படாத காரணத்தினால், இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக டேனியல் சாம்ஸிர்க்கு வாய்ப்பு வழங்க அந்த அணியின் கேப்டன் விராட் கோலி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த தொடரில் இதுவரை பெங்களூர் அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

RCB

இதற்கிடையே சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட தகுதிபெறாத சென்னை அணி இந்த தொடரில் தான் விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. புள்ளிப் பட்டியிலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதிக் கொள்ள இருப்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய போட்டிக்கான பெங்களூரு அணியின் உத்தேச ஆடும் லெவன் அணியை நாங்கள் இங்கு கொடுத்துள்ளோம்.

- Advertisement -

harshal patel

பெங்களூர் அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) விராட் கோலி, 2) தேவ்தத் படிக்கல், 3) ஷபாஸ் அஹமத், 4) கிளென் மேக்ஸ்வெல், 5) டி வில்லியர்ஸ், 6) வாஷிங்டன் சுந்தர், 7) கைல் ஜேமிசன், 8) டேனியல் சாம்ஸ்/ கேன் ரிச்சார்ட்சன், 9) ஹர்ஷல் படரடேல், 10) முகமது சிராஜ், 11) சாஹல்.

Advertisement