என்னாச்சி கோலிக்கு ? தொட்டதெல்லாம் தப்பா இருக்கு – தவறான முடிவால் தத்தளிக்கும் பெங்களூரு

RCBvsKKR
- Advertisement -

14வது ஐபிஎல் தொடரின் 31வது போட்டி தற்போது அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் பின்னர் விளையாடிய பெங்களூர் அணியானது துவகத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

rcb

- Advertisement -

கோலி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்த வெளியேற, படிக்கல் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வெளியேறினார். பின்னர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 10 ரன்களிலும், டிவில்லியர்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அறிமுகமான பரத் 16 ரன்களை குவித்தார். அதன் பின்னர் வந்த யாருமே பெரிய அளவில் ரன் குவிக்காததால் 19 ஓவர்களில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் தற்போது 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடுகிறது. கொல்கத்தா அணி சார்பாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரசல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

prasidh

இந்த போட்டியில் கேப்டன் கோலி எடுத்த ஒரு தவறான முடிவு தற்போது பெங்களூர் அணியை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது. ஏனெனில் அபுதாபி மைதானம் அளவு பெரியது அதுமட்டுமின்றி சேஸிங்கிற்கு சாதகமான ஒரு மைதானம். இதனால் எப்போதும் இந்த மைதானத்தில் டாசில் வெற்றி பெறும் அணி முதலில் பந்துவீசவே விருப்பப்படும்.

ஆனால் கோலி சமீபகாலமாக எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வது போன்று இம்முறையும் பேட்டிங்கை தேர்வு செய்து பெங்களூரு அணியை சிக்கலில் தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement