- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்.சி.பி அணியின் வெற்றி ஊர்வலம் இந்தாண்டு நடைபெறாது.. நிர்வாகம் அறிவிப்பு – காரணம் என்ன?

ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்தியாவில் நடைபெற்று வந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் 14 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தது.

ஆர்.சி.பி அணியின் வெற்றி பேரணி நடைபெறாது : நிர்வாகம் அறிவிப்பு

பின்னர் மே 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் மீண்டும் ஒருமுறை குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே கடந்த 2025 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்ற ஆர்.சி.பி அணி இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி தங்களது இரண்டாவது கோப்பையை பெற்றது. இதன் காரணமாக ஆர்.சி.பி அணி ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை தொடர்ந்து வெற்றிக்கான வீரர்களின் பேரணி இந்த ஆண்டு நடைபெறாது என ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : கடந்த ஆண்டு முதல் முறையாக ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்றிய போது வீரர்களின் பேரணி நடைபெற்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் சிலர் உயிரிழந்தனர்.

அதன் காரணமாக பெங்களூரு அணியின் நிர்வாகம் மிகப்பெரிய மன வேதனைக்கு ஆளானது. எனவே இந்த ஆண்டு வீரர்களின் பேரணி நடைபெறாது என்று தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த 2027 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் விளையாட டிம் டேவிட்க்கு தடை – என்ன காரணம்?

ஆனால் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த வெற்றியில் பங்கேற்ற வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்குகும் ரசிகர்களின் முன்னிலையில் கௌரவம் அளிக்கப்படும். அதோடு இந்த ஏற்பாட்டில் சிறப்பு பாராட்டும் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகள் ஆகியவை நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -