ஒவ்வொரு ஆண்டும் ஒரு போட்டியிலாவது பெங்களூரு அணி பச்சை நிற உடையில் விளையாட காரணம் இதுதான் – விவரம் இதோ

RCB-Green
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக சாம் கரன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் 51 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் தோனியும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒரு ஆறுதலான வெற்றியை அடைந்துள்ளது.

kohli

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற சீருடை அணிந்து விளையாட காரணம் என்ன என்று ரகசியம் வெளியாகியுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு ஒரு போட்டியிலாவது பச்சை நிற சீருடையில் கலந்துகொள்ளும் அதற்கு காரணம் யாதெனில் உலகம் முழுவதும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்றும் மறு சுழற்சி ஆகும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிகையை முன்னிறுத்தி அவர்கள் இந்த செயலை செய்கின்றனர்.

go green

“கோ க்ரீன்” என்ற வாசகத்திற்கு இணங்க உலகம் பசுமையை பெற்று இருக்க வளமாக இருக்க வேண்டும் என்பதாலும் அவர்கள் அதனை முன்னிறுத்தி பச்சை நிற சீருடை அணிந்து விளையாடுகின்றனர். மேலும் எப்போது பச்சை நிற சீருடை அணியும் போதும் அவர்கள் மரம் நடுவதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு ஒரு செடியை போட்டியின் முன்னர் பெறுவது அவர்களது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement