இன்னும் ஒரு தோல்வி வந்தா கூட எல்லாம் போச்சு.. மீண்டும் ஏமாற்றத்தை சந்திக்கவுள்ள – ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள்

RCB
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது நேற்று சொந்த மண்ணில் நடைபெற்ற மிக முக்கியமான லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

இந்த தோல்வியின் மூலம் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஆறு தோல்விகளை சந்தித்து வெறும் 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றனர். அதோடு பெங்களூரு அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக உள்ளதால் இனிவரும் போட்டிகளிலும் பெங்களூரு அணி பெரிய சறுக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

எனவே இந்த ஆண்டாவது பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஏமாற்றமே கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் இந்த தொடரில் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இனிவரும் எஞ்சியுள்ள 7 போட்டிகளில் 7 வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி 16 புள்ளிகளை பெற முடியும். அப்படி எட்டு வெற்றிகளுடன் 16 புள்ளிகளை எடுத்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும்.

- Advertisement -

ஒருவேளை மேலும் ஒரு அணி எட்டு வெற்றிகளை பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையிலேயே எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பது தெரியும். அந்த வகையில் இனிவரும் ஏழு போட்டிகளில் ஒன்றில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது.

இதையும் படிங்க : ஆர்சிபி அணியில் என்னை ட்ராப் பண்ண சொல்லிட்டேன்.. காரணம் இது தான்.. மேக்ஸ்வெல் பரிதாப பேட்டி

அதோடு இனிவரும் போட்டிகள் அனைத்திலும் நல்ல ரன் ரேட்டுடன் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டியது அவசியமாகியுள்ளதால் கிட்டத்தட்ட பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது மீண்டும் ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement