ஆர்சிபி அணியில் என்னை ட்ராப் பண்ண சொல்லிட்டேன்.. காரணம் இது தான்.. மேக்ஸ்வெல் பரிதாப பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 15ஆம் ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மோசமாக பந்து வீசிய பெங்களூரு 287 ரன்களை கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வாரி வழங்கிய அணி என்ற மோசமான சாதனையை படைத்தது.

அதை சேசிங் செய்த அந்த அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 62, விராட் கோலி 42, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்து போராடினார்கள். ஆனாலும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பெங்களூரு அணி 7 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்தது. அதனால் பிளே ஆஃப் செல்ல அடுத்த 7 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு பெங்களூரு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

மேக்ஸ்வெல் விலகல்:
அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்திய அந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கிளன் மேக்ஸ்வெல் விளையாடாதது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் இந்த வருடம் சுமாராகவே செயல்பட்டாலும் இது போன்ற போட்டிகளில் சரவெடியாக விளையாடி ஒரே ஓவரில் வெற்றியை மாற்றக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில் முதல் 6 போட்டிகளில் 32 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்ட தாம் மேற்கொண்டு அணிக்கு பின்னடைவு ஏற்படுத்த விரும்பவில்லை என மேக்ஸ்வெல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதனால் இப்போட்டிக்கு முன் தாமாக சென்று கேப்டன் டு பிளேஸியிடம் தம்மை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கும் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தமக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் இது எனக்கு எளிதான முடிவு. கடந்த போட்டி முடிந்ததும் டு பிளேஸிஸ் மற்றும் பயிற்சியாளரிடம் சென்ற நான் இது வேறு யாரையாவது முயற்சிக்க வேண்டிய நேரம் என்று சொன்னேன். கடந்த காலங்களில் இந்த சூழ்நிலையில் நான் இருந்தேன். மோசமான சூழ்நிலையில் நீங்கள் தொடர்ந்து விளையாடினால் உங்களை ஒரு ஆழமான துளைக்குள் அழுத்த வேண்டும்”

இதையும் படிங்க: ரோஹித் சொன்ன 2024 டி20 உ.கோ வாய்ப்பை நிஜமாக்குவாரா? 38 வயதில் 2 மிரட்டல் சாதனை படைத்த டிகே

“எனவே மனதளவில் உடல் ரீதியாக சிறிது ஓய்வு கொடுத்து என் உடலை சரியாக பெற இது நல்ல நேரம் என்று நினைக்கிறேன். அதனால் இந்த தொடரில் தேவைப்படும் போது நான் இன்னும் உறுதியான மன மற்றும் உடல் திடத்துடன் வந்து உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதுவரை இது மற்றொரு வீரர் வாய்ப்பு பெற்று தன்னுடைய திறமையை காண்பித்து இடத்தைப் பிடிப்பதற்கான நேரமாகும்” என்று சோகத்துடன் கூறினார்.

Advertisement