ரோஹித் சொன்ன 2024 டி20 உ.கோ வாய்ப்பை நிஜமாக்குவாரா? 38 வயதில் 2 மிரட்டல் சாதனை படைத்த டிகே

- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி 7 போட்டிகளில் 6 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. குறிப்பாக ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற தங்களின் 7வது போட்டியில் ஹைதராபாத் அணியிடம் 25 ரன்கள் வித்யாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் டிராவிஸ் ஹெட் 102, ஹென்றிச் க்ளாஸென் 67 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 287/3 ரன்கள் அடித்தது.

அதன் வாயிலாக அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்த அணியாக ஹைதராபாத் சாதனையும் படைத்தது. அதன் பின் சேசிங் செய்த பெங்களூருவுக்கு டு பிளேஸிஸ் 62, விராட் கோலி 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் வில் ஜேக்ஸ் 7, ரஜத் படிடார் 9, சௌரவ் சௌஹான் 0, மகிபால் லோம்ரர் 19 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

மிரட்டும் டிகே:
ஆனாலும் லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய மொத்த அனுபவத்தையும் பயன்படுத்தி ஹைதராபாத் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார். குறிப்பாக தமிழக வீரர் நடராஜனுக்கு எதிராக 108 மீட்டர் சிக்ஸரை மைதானத்திற்கு வெளியே பறக்க விட்ட அவர் 2024 ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதற்கு முன் நிக்கோலஸ் பூரான், வெங்கடேஷ் ஐயர், ஹென்றிச் க்ளாஸென் தலா 106 மீட்டர் சிக்ஸர் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் 5 பவுண்டரி 7 சிக்சரை பறக்க விட்டு 83 (35) ரன்கள் குவித்து முழு மூச்சுடன் போராடிய தினேஷ் கார்த்திக் கடைசியில் நடராஜன் வேகத்திலேயே ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 38 வயதுக்குப்பின் அதிகபட்ச ஸ்கோர் (83) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 2023 சீசன் லக்னோவுக்கு எதிராக 38 வயதில் ரித்திமான் சஹா 81 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். சொல்லப்போனால் மும்பைக்கு எதிரான கடந்த போட்டியிலேயே அதிரடியாக விளையாடிய அவரை “சபாஷ் டிகே. 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக நீங்கள் இப்படி விளையாடுகிறீர்களா” என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கலகலப்பாக பாராட்டினார்.

இதையும் படிங்க: 4 அரை சதம்.. ஸ்கூல் பவுலர்களை விட மோசம்.. டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி படுமோசமான உலக சாதனை

ஏனெனில் வர்ணனையாளராக மாறியதால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 2022 சீசனில் பெங்களூரு அணிக்காக 330 ரன்களை 183 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்காக விளையாடினார். அதே போல இம்முறை 7 போட்டிகளில் 226* ரன்களை 205.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மிரட்டி வரும் அவர் ரோகித் சர்மா சொன்னது போல 2024 டி20 உலகக் கோப்பை கனவை நிஜமாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement