4 அரை சதம்.. ஸ்கூல் பவுலர்களை விட மோசம்.. டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி படுமோசமான உலக சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற 30வது லீக் போட்டியில் பெங்களூருவை 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது. பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 287/3 ரன்கள் குவித்து அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102, ஹென்றிச் க்ளாஸென் 67 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 62, விராட் கோலி 42, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அதிரடியாக எடுத்து போராடினார்கள்.

- Advertisement -

மோசமான சாதனை:
ஆனால் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவரில் 262/7 ரன்களுக்கு பெங்களூருவை கட்டுப்படுத்தி வென்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முன்னதாக காலம் காலமாக பெங்களூரு பவுலர்கள் மோசமாக பந்து வீசி ரன்களை வாரி வழங்குவதே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.

ஆனால் இந்த போட்டியில் வரலாற்றிலேயே உச்சகட்டமாக ஆர்சிபி பவுலர்கள் அனைவரும் சேர்ந்து 287 ரன்கள் வாரி வழங்கினர். அதனால் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த அணி என்ற பரிதாப சாதனையை பெங்களூரு படைத்தது. அதை விட இந்த போட்டியில் யாஷ் தயாள் 51, ரீஸ் டாப்லி 68, லாக்கி பெர்குசன் 52, விஜயகுமார் வைசக் 64 என பெங்களூரு அணியின் 4 பவுலர்கள் 50க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கினர்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒரு டி20 போட்டியில் பந்து வீச்சில் 4 அரை சதங்கள் அடித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை பெங்களூரு படைத்துள்ளது. இதற்கு முன் சர்வதேசம் முதல் உள்ளூர் வரை வேறு எந்த போட்டியிலும் இப்படி ஒரு அணியின் 4 பவுலர்கள் 50+ ரன்கள் வாரி வழங்கியதில்லை. அதைப் பயன்படுத்தி இப்போட்டியில் ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் சதமடித்தார்.

இதையும் படிங்க: ரொம்ப கஷ்டம்ங்க இதுக்குமேல எங்களால போராட முடியல.. தோல்விக்கு பின்னர் – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்களை கொடுத்த அணி மோசமான சாதனையையும் பெங்களூரு படைத்துள்ளது. இதற்கு முன் மும்பை அணி அதிகபட்சமாக 17 சதங்கள் கொடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும். தற்போது 2008 – 2024 வரை எதிரணிகளுக்கு மொத்தம் 18 சதங்களை வழங்கியுள்ள பெங்களூரு அணி அந்த சாதனையை உடைத்து மற்றுமொரு பரிதாப சாதனை படைத்துள்ளது. மொத்தத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது 90% கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement