ரொம்ப கஷ்டம்ங்க இதுக்குமேல எங்களால போராட முடியல.. தோல்விக்கு பின்னர் – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf
- Advertisement -

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டத்தை அளித்து இறுதியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி இந்த தொடரில் தங்களது ஆறாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்த மைதானம் அளவில் சிறியது என்பதனால் அதிகளவு ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சன் ரைசர்ஸ் அணி எதிர்பார்ப்பையும் மீறி 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 287 என்கிற பிரம்மாண்டமான ரன் குவிப்பை வழங்கி வரலாற்று சாதனையை நிகழ்த்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கினை துரத்தி விளையாடிய பெங்களூரு அணியானது விடாப்பிடியாக போராடி இறுதி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. இருப்பினும் 20 ஓவர்களில் அவர்களால் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் சன் ரைசர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரசிகர்களுக்கு விருந்தளித்த இந்த போட்டிக்கு பின்னர் தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளனர். டி20 கிரிக்கெட் ஏற்ற மைதானமாக இந்த மைதானம் இருந்தது. கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம்.

- Advertisement -

ஆனால் 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று. இருந்தாலும் நாங்கள் நிறைய விடயங்களை இந்த போட்டியில் முயற்சி செய்தோம். அந்த முயற்சிகள் பலன் அளித்துள்ளன. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதில் மிக சிரமத்தை சந்தித்தனர். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்கெதிராக 287 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது குறித்து பேசிய பேட் கம்மின்ஸ் – போட்டிக்கு பின் பேசியது என்ன?

எங்களது பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பவர்பிளே ஓவர்களில் நாங்கள் ரன் ரேட்டினை மனதில் வைத்து தான் எந்த இடத்திலும் ரன்களை குறைய விடாமல் விளையாடினோம். ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் 30 முதல் 40 ரன்கள் வரை நாங்கள் அதிகமாக வழங்கி விட்டோம். அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement