ஆர்.சி.பி அணிக்கெதிராக 287 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது குறித்து பேசிய பேட் கம்மின்ஸ் – போட்டிக்கு பின் பேசியது என்ன?

Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாஸன் 67 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது.

பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 62 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 83 ரன்களையும் குவித்தனர். இருப்பினும் பெங்களூரு அணி இந்த போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியினை பொறுத்தவரை நான் ஒரு பேட்டராக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் இருந்தது. உண்மையிலேயே இந்த போட்டி பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இது போன்ற போட்டிகளில் சிறப்பான செயல்பாடுகள் வெளிவரும். உண்மையிலேயே இந்த மைதானத்தின் தன்மையை அறிய வேண்டுமெனில் ஒரு பவுலர் 7 முதல் 8 ஓவர் வரை வீசினால் மட்டுமே மைதானத்தின் தன்மையை கணித்து போட்டியில் நமது திறனை வெளிப்படுத்த முடியும்.

இதையும் படிங்க : மும்பை மேட்ச் அப்போ என்னை டாஸ்ல ஏமாத்திட்டாங்க.. பேட் கம்மின்ஸிடம் செய்து காட்டிய டூபிளெஸ்ஸிஸ் – நடந்தது என்ன?

இந்த மைதானம் மிகவும் டிரையாக உள்ளது. ஒரு அணியாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அடுத்தடுத்து நான்கு வெற்றிகளைப் பெற்றதில் மகிழ்ச்சி. எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் என பேட் கம்மின்ஸ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement