மும்பை மேட்ச் அப்போ என்னை டாஸ்ல ஏமாத்திட்டாங்க.. பேட் கம்மின்ஸிடம் செய்து காட்டிய டூபிளெஸ்ஸிஸ் – நடந்தது என்ன?

Faf
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது மும்பை மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 197 ரன்கள் என்கிற பிரமாண்டமான ரன் குவிப்பை வழங்கி இருந்தது.

இருப்பினும் அதனை எதிர்த்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி 15.3 ஓவரிலேயே சேசிங் செய்து அபாரமான வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஆர்.சி.பி அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூருவில் விளையாடி முடித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக டாஸ் போடும் இடத்திற்கு வந்த டூப்ளிசில் கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது டாசில் எவ்வாறு தான் ஏமாந்தேன் என்பது குறித்து பேட் கம்மின்ஸ்ஸிடம் கூறுவது போல சில செய்கைகளை வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பேட் கம்மின்ஸ்சிடம் டூபிளெஸ்ஸிஸ் செய்கையில் கூறியதாவது : கடந்த போட்டியின் போது என்ன நடந்தது தெரியுமா? டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள். அப்போது அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என்பது போன்று செய்கையை செய்து காட்டி விளக்கம் கொடுத்தார்.

- Advertisement -

இதனை கேட்ட கம்மின்ஸ் சிரித்தவாறு அதனை கவனித்துக் கொண்டிருந்தார். இப்படி டூபிளெஸ்ஸிஸ் இவ்வாறு செய்ய காரணம் யாதெனில் : வான்கடே மைதானத்தில் அவர்கள் கடைசியாக விளையாடிய போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா மற்றும் டூப்ளிசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

இதையும் படிங்க : திடீரென அஜின்க்யா ரஹானே சி.எஸ்.கே அணியின் துவக்க வீரராக மாற்றப்பட்டது ஏன்? – ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்த விளக்கம்

அப்போது டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டூபிளெஸ்ஸிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதோடு எப்போதுமே மும்பை அணி வான்கடே மைதானத்தில் விளையாடும் போது அவர்களுக்கே முடிவுகள் சாதகமாக இருப்பதாகவும் ரசிகர்களும் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement