அப்போ இந்த வருடமும் ஈ சாலா கப் நமக்கு இல்லையா ! ஆர்சிபி ரசிகர்களை கவலையடைய வைக்கும் புள்ளிவிவரம்

RCB vs PBKS Extras
- Advertisement -

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை நகரில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் பல பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வருடம் 10 அணிகள் விளையாடுவதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான போட்டி முன்பை விட இரு மடங்கு அதிகமாகியுள்ள நிலையில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் திண்டாடுகின்றன. தற்போதைய நிலைமையில் அந்த 2 அணிகளும் இனி வரும் போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

RCB vs MI

- Advertisement -

புது சாம்பியனாகுமா பெங்களூரு:
மறுபுறம் புதிய அணிகளாக விளையாடி வரும் குஜராத், லக்னோ அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் வெற்றி நடை போடுகின்றன. அதேபோல் இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து 2-வது இடத்தில் ஜொலிக்கிறது. தற்போதைய நிலைமையில் முதல் 4 இடங்களில் குஜராத், பெங்களூரு, ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் உள்ளதால் இந்த வருடம் இதுவரை கோப்பைகளை வெல்லாத ஏதோ ஒரு புதிய அணி சாம்பியனாக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அந்த புதிய சாம்பியன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டு வெற்றி நடை போட்டு வரும் டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியாக இருக்குமா என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் கடந்த 2008 முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்தபோதிலும் கோப்பையை வெல்ல முடியாத அந்த அணி 2013 – 2021 வரை நட்சத்திர வீரர் விராட் கோலி தலைமையில் எவ்வளவோ போராடிய போதிலும் கோப்பையை தொட முடியாமல் தோல்வி அடைந்தது.

RCB Faf Virat

கலக்கும் பெங்களூரு:
அதனால் கடும் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகி வரும் அந்த அணி இந்த வருடம் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் டுப்லஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி போன்றவர்கள் தேவையான ரன்களை அடிக்க கடைசி நேரத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிகரமான பினிஷராக செயல்பட்டு கிடைக்காத வெற்றிகளை கூட சாத்தியமாக்கி காட்டுகிறார்.

- Advertisement -

அதேபோல் பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல், சிராஜ், ஹசரங்கா ஆகியோருடன் ஜோஷ் ஹேசல்வுட் கைகோர்த்துள்ளதால் கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு அந்த அணியின் பந்துவீச்சு கூட்டணியும் பலமாக உள்ளது. எனவே இம்முறை அனைத்தும் சரியாக அமைந்து கச்சிதமாக அணியாக காட்சி அளிக்கும் பெங்களூரு நிச்சயம் கோப்பையை முத்தமிட்டப் போவது உறுதி என அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.

Virat Kohli Dinesh Karthi RCB

கப் நமக்கு இல்லையா:
அதற்கு ஏற்றார்போல் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ள அந்த அணி அடுத்த 7 போட்டிகளில் இன்னும் 4 வெற்றிகளை பதிவு செய்தால் போதும் என்பதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதியாகியுள்ளது. இப்படி வெற்றியை நோக்கி பயணிக்கும் பெங்களூரு ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக ஒரு புள்ளிவிவரம் காட்சி அளிக்கிறது.

- Advertisement -

1. அதாவது கடந்த 2021 ஐபிஎல் தொடரில் இதே போலவே முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்த அந்த அணி முதல் 7 போட்டிகளில் சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளிடம் தோற்றது.

CSK vs RCB 2

2. தற்போது ஆச்சரியப்படும் வகையில் இந்த வருடமும் அதே போல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ள அந்த அணி சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக அச்சில் வார்த்தார் போல் தோற்றுள்ளது. எனவே ஹிஸ்டரி ரிபீட் என்பது போல் இந்த வருடமும் அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்தாலும் வழக்கம் போல பிளே ஆப் சுற்றில் தோற்று விடுவோமோ என்ற அச்சம் பெங்களூர் அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

3. மேலும் கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய தொடர்களிலும் இதே போலவே தனது முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்த பெங்களூரு ஐபிஎல் தொடரை அபாரமாக துவக்கியது.

4. அப்படி அட்டகாசமாக துவங்கிய அந்த அணி அதன்பின் ஒரு சில தோல்விகளைச் சந்தித்தாலும் தேவையான அளவுக்கு வெற்றிகளைப் பெற்று 2020 மற்றும் 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

5. ஆனால் அந்த 2 வருடங்களிலும் புள்ளிப் பட்டியலில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களை பிடித்ததால் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடிய அந்த அணி பரிதாபமாக தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

7. இதனால் ஈ சாலா கப் இந்த முறையும் நமக்கு இல்லையா என கவலை அடையும் பெங்களூரு ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக கேப்டன்ஷிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றமான டு பிளசிஸ் மட்டுமே நம்பிக்கையாய் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement