ஒருவழியாக ஐ.பி.எல் தொடரில் விளையாட தேர்வாகியுள்ள ஹசரங்கா – அந்த அணி வாங்கியுள்ளது தெரியுமா ?

Hasaranga
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டு சீசனில் எஞ்சியுள்ள 31 போட்டிகள் எங்கு ? எப்போது ? நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது.

IPL

- Advertisement -

மேலும் அதற்கான அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல அணிகளில் உள்ள வீரர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகிய மூவரும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களை பெங்களூரு அணி தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் ஆடம் ஜாம்பாவிற்கு பதிலாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளராக ஹசரங்காவை ஆர்சிபி தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது.

hasaranga 1

சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் பின்வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர். இதனால் அணியின் பலம் சேர்க்கும் வீரராக அவர் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு வீரர்கள் அணியில் இணைந்து உள்ளதாக தெரிகிறது.

hasaranga

அண்மையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் நிச்சயம் பெங்களூரு அணிக்கு பலம் சேர்ப்பார் என்றே தெரிகிறது.

Advertisement