எங்களோட பெருமையை நாங்க இழக்க முடியாது.. ஆர்.சி.பி போட்டிகள் இங்கு தான் நடக்கும் – துணை முதல்வர் உறுதி

RCB
- Advertisement -

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆர்.சி.பி அணி 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத வேளையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி வரலாறு நிகழ்த்தியது. ஆர்.சி.பி அணியின் இந்த வெற்றி உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எங்களுடைய பெருமையை நாங்கள் இழக்க மாட்டோம் : ஆர்.சி.பி

இத்தனை ஆண்டுகளாக ஒரு அணி கோப்பையை கைப்பற்றாமல் இருந்தாலும் இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணியாக பார்க்கப்பட்டு வரும் பெங்களூர் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றியதால் மேலும் அந்த அணியின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதனால் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி எந்த மைதானத்தில் விளையாடப் போகிறது? என்பது தான் பலரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது 40 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய விமர்சனத்தை அந்த அணி மீது ஏற்படுத்தியது.

அதன் காரணமாக இனி அங்கு போட்டி நடைபெறாது என்றும் சின்னசாமி மைதானம் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிய மைதானம் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கர்நாடக மாநில துணை முதல்வர் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

ஐ.பி.எல் போட்டிகளை சின்னசாமி மைதானத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம். ஏனெனில் சின்னசாமி மைதானம் என்பது பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பெருமையை சார்ந்தது. ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். எங்களுடைய பாரம்பரியத்தை நாங்கள் இழக்க விரும்பவில்லை. சின்னசாமி மைதானத்திற்கு என ஒரு வரலாறு இருக்கிறது.

இதையும் படிங்க : இன்னும் 3 வருஷம் விளையாடுனா போதும்.. நிச்சயமா விராட் கோலியால் அதை சாதிக்க முடியும் – கவாஸ்கர் கருத்து

நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் பார்த்துக் கொள்வோம். மைதானத்தின் நற்பெயரையும் பாதுகாப்போம். அதே போன்று தேவையென்றால் மற்றொரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம் என்று உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானமாக சின்னசாமி மைதானத்தில் தான் விளையாடும் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement