கடந்த போட்டியில் செய்த தவறை திருத்திக்கொள்வாரா விராட் கோலி – விவரம் இதோ

Kohli-angry
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரானது கடந்த மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இத்தொடரில் 29 போட்டிகள் முடிவுற்ற நிலையில், 30வது லீக் போட்டியானது இன்று, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த போட்டியில் செய்த தவறை இந்த போட்டியில் சரி செய்வாரா என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

KKRvsRCB

- Advertisement -

பெங்களூர் அணியானது தனது கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அப்போது அந்த அணிக்காக, பவர் ப்ளே ஓவர்களில் சிக்கனமாக பந்துவீசி வந்த தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கொடுக்காமல், அவருக்கு பதில் மற்றொரு ஆல்ரவுண்டரான் ஷபாஸ் அஹமதுவுக்கு வாய்ப்பு அளித்திருந்தார் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி. ஆனால் அப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்ட வீரரான ஷபாஸ் அஹமத், அந்த போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியருந்தார்.

பார்ட் டைம் ஸ்பின்னரான ஷபாஸ் அஹமத்தை அணிக்குள் கொண்டுவந்து, முழுநேர பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்காத இந்த முடிவை பார்த்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மீது அதிருப்தியில் இருந்தனர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்கள். இதனிடையில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் விளையாடும் அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.

Sundar-2

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இத்தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் உத்தேச ப்ளயிங் லெவன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பெங்களூர் அணி:

01. விராட் கோலி 02. தேவ்தத் படிக்கல் 03. ராஜத் படிதார் 04. கிளன் மேக்ஸ்வெல் 05. ஏபி டி வில்லியர்ஸ் 06. வாஷிங்டன் சுந்தர் 07. டேனியல் சாம்ஸ் 08. முகம்மது சிராஜ் 09. ஹர்ஷல் பட்டேல் 10. கைல் ஜேமிசன் 11. சஹால்

இருப்பினும் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement