இந்தாண்டு ஆர்.சி.பி அணியின் துவக்க வீரர்கள் இவர்கள்தான் – புது திட்டத்துடன் களமிறங்கும் பெங்களூரு

Padikkal 3
- Advertisement -

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றதில்லை.மூன்று முறை பைனல் வரை சென்ற பெங்களூரு அணி மூன்று முறையும் பைனனில் கோப்பையை வெல்லும் வாயப்பை தவறவிட்டது.
2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத்திடம் இறுதி போட்டியில் தோற்று கோப்பை வெல்லும் கனவை இழந்தது.அதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளிடம் இறுதி போட்டியில் தோற்று மறுபடியும் கோப்பை வெல்லும் கனவை இழந்தது.

rcb

அதிரடி மன்னன் ஏபி டிவில்லியர்ஸ் , கேப்டன் கோலி, மாயாஜால சுழற்பந்து வீரர் சஹால் என பல முன்னனி வீரர்கள ஒவ்வொரு சீசனில் இருந்தும் கூட இதுவரை பெங்களூரு அணியால்
ஒரு சீசனை கூட வெல்ல முடியவில்லை என்பதே வேதனைக்குறிய விஷயம். டெஸ்ட் தொடர்களில் கோப்பைகளை வென்று குவிக்கும் விராட்டால் ஏன் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.இது இன்னமும் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய கேலி மற்றும் கிண்டல் பொருளாகவே உள்ளது.

- Advertisement -

இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்த ஆர்சிபி தனது அணியில் சென்ற வருடம் சரியாக விளையாடாத உமேஷ் யாதவ் , மொயின் அலி , ஆரோன் பின்ச் மற்றும் டேல் ஸ்டெயின் போன்ற முன்னனி வீரர்களை அதிரடியாக நீக்கியது.மேலும் இந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில் கிளன் மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கும் , கையில் ஜேம்சனை 15 கோடிக்கும் , டேனியல் கிறிஸ்டினை 4.8 கோடிக்கும் , முகமது அசாருதீனை 20 லட்சத்திற்கும் , சச்சின் பேபியை 20 லட்சத்திற்கும் , சுயஸ் பிரபுதேசாயை 20 லட்சத்திற்கும் , கே எஸ் பரத்தை 20 லட்சத்திற்கும் வாங்கி போட்டு அணியை பலப்படுத்தியுள்ளது.

Padikkal 2

அதுபோக வருகின்ற ஐபிஎல் தொடரை வெல்ல மிகப்பெரிய வியூகமும் வகுத்து கொண்டு வருகிறது.
அதில் குறிப்பாக ஓப்பனிங்கில் ஒரு பெரிய மாற்றம் நிகழ இருப்பதாக பேச்சு வந்துள்ளது.சென்ற வருடம் ஓப்பனிங்கில் யாரும் சரியாக ஆடாமல் போக பவர்பிளே ஓவர்கள் வீனடிக்க பட்டதே அணியின் மிகப்பெரிய வீக்னெஸ் என வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில் தேவ்டட் படிக்கல் மற்றும் ஜோஷ் பிலிஃப்பி ஜோடியை அணியின் துவக்க வீரர்களாக ஓப்பனிங் இறங்க உள்ளதாகவும் மேலும் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டின் அணியில் இடம்பிடிப்பார் என்றும் தெரிகிறது.

phillipe

தேவ்தத் படிக்கள் மற்றும் ஜோஷ் பிலிப்பி ஆகிய இரு வீரர்களை தங்களது அணியின் துவக்க வீரர்களாக களம் தகவல்கள் கசிந்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் மாற்றம் மட்டுமே செய்து என்ன பிரோயஜனம் கோப்பையை வெல்ல முடியவில்லையே என மற்ற அணி வீரர்கள் கிண்டலடித்து வரும் நிலையில் இந்தாண்டு எப்படியாவது தங்கள் அணி கோப்பையை வென்று அவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என ஒரு பக்கம் பெங்களூரு ரசிகர்கள் தவித்து கொண்டு வருகின்றனர்.

Advertisement