சென்னை அணி தவறவிட்ட பிரமாதமான வீரரான டூபிளெஸ்ஸிஸ்ஸை 7 கோடி ரூபாய்க்கு – வாங்கிய புதியஅணி

Faf
- Advertisement -

பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் இன்று பெங்களூரு நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த மெகா ஏலத்தில் முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் அடிப்படை விலையாக கொண்ட வீரர்கள் தற்போது ஏலத்தில் விடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் அனுபவ வீரருமான ஃபேப் டு பிளேசிஸ் தனது பெயரை இரண்டு கோடி ரூபாய் அடிப்படை பிரிவில் பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இதுவரை 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2935 ரன்களை குவித்துள்ளார். அதிரடி துவக்க வீரரான இவர் தற்போது முப்பத்தி ஏழு வயதை தொட்ட நிலையிலும் இன்னும் தனது சிறப்பான உடற்பகுதி மற்றும் அட்டகாசமான பேட்டிங் திறன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் அவரை மீண்டும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து அணியில் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக சென்னை அணி அவரை மெகா ஏலத்தில் பெரிய அளவில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மற்ற அணிகள் அனைத்தும் அவரை ஏலம் எடுக்க போட்டி போட்டன.

RCB

அதில் இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு டூபிளெஸ்ஸிஸ்ஸை ஏலத்தில் எடுத்தது. வலதுகை தொடக்க வீரரான டு பிளேசிஸ் ஐபிஎல் தொடர்களில் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் இம்முறை பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்படுவார்எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அனுபவம் மற்றும் திறமை காரணமாக அவரை வயது முதிர்வு என்று கூட பார்க்காமல் நம்பி அவரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை முதல் நபராக 2 கோடி ரூபாய்க்கு ராபின் உத்தப்பாவையும், ஆல்ரவுண்டர் பிராவோவை 4 கோடியே 40 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்து உள்ளது.

இதையும் படிங்க : அட்டகாசமான வீரரை அசத்தலான தொகைக்கு முதல் ஆளாக வாங்கிய சி.எஸ்.கே அணி – அந்த வீரர் யார் தெரியுமா?

அவர்களை தவிர்த்து சி.எஸ்.கே அணியின் அனுபவ வீரர் மற்றும் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னாவை முதல் சுற்றில் யாரும் ஏலம் எடுக்காததால் அவர் விற்கப்படாமல் போனார். இருப்பினும் அடுத்த சுற்றில் அவர் ஏதாவது ஒரு அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து தற்போது இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலமானது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement