அட்டகாசமான வீரரை அசத்தலான தொகைக்கு முதல் ஆளாக வாங்கிய சி.எஸ்.கே அணி – அந்த வீரர் யார் தெரியுமா?

csk-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 15வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது பெங்களூருவில் ஐபிஎல் வீரர்களின் ஏலம் இன்று துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை இந்த ஏலத்தில் தேர்வு செய்யும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும் உள்ளது.

csk

- Advertisement -

ஏனெனில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாகவும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் உள்ள சிஎஸ்கே அணியானது இம்முறை எந்தெந்த வீரர்களின் மீது தங்களது கவனத்தை செலுத்துகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணி ஏற்கனவே அணியில் தக்க வைக்கப் பட்ட நான்கு வீரர்களை தவிர்த்து சில வீரர்களை வாங்கியுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி முதல் நபராக வாங்கிய வீரர் யாரெனில் கடந்த ஆண்டு சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிகட்டத்தில் சென்னை அணி கோப்பையை கைப்பற்ற காரணமாக அமைந்த ராபின் உத்தப்பா அடிப்படையான இரண்டு கோடி ரூபாய்க்கே மீண்டும் வாங்கி உள்ளது.

Uthappa-2

இப்படி மெகா ஏலத்தில் முதல் நபராக சென்னை அணி உத்தப்பாவை வாங்கி உள்ளதால் சிஎஸ்கே அணி சிறப்பான ஒரு தேர்வு செய்துள்ளது என்றே கூறலாம். அவரின் இந்த தேர்வு ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த சீசனில் இறுதி சுற்றின்போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா சென்னை அணிக்காக அதிரடியாக ரன்களை விளாசி வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிஎஸ்கே அணியின் முதல் தேர்வே ஒரு அருமையான தேர்வு என்று கூறலாம். மேலும் அவரைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவை மீண்டும் 4.40 கோடிக்கு சென்னை அணி வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2022 : அஷ்வினை தவறவிட்ட சி.எஸ்.கே – வெறும் 5 கோடிக்கு தட்டி தூக்கிய அணி – எது தெரியுமா?

இதில் வருத்தமான விடயம் யாதெனில் சென்னை அணியின் முன்னாள் துணை கேப்டனும் அனுபவ வீரரான சுரேஷ் ரெய்னா அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்த சுற்றில் அவர் ஏலத்தில் வேறு ஏதாவது அணியில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Advertisement