இவரை அணியில் எடுத்தால் மட்டுமே பெங்களூரு அணிக்கு கோப்பை கிடைக்கும் – இல்லனா இந்த வருஷமும் போச்சு

RCB2019
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. ரசிகர்களின் தொடர் ஆதரவால் ஆண்டுதோறும் பலத்த எதிர்பார்ப்போடு துவங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு இந்த ஆண்டும் அமோக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 13 ஆவது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறுகிறது.

Ipl cup

- Advertisement -

இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் வருகின்ற 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏல போட்டியில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 713 இந்திய வீரர்களும் 258 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். ஏற்கனவே இதிலிருந்து 23 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீதி வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஆண்டுதோறும் பலமான அணியாகவும் கோப்பையை கைப்பற்றும் அணியாகும் பெங்களூர் அணி பார்க்கப்பட்டு வந்தாலும் அந்த அணியின் பேட்டிங் பலமே ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகளைத் தேடித் தருகிறது. ஆனால் பந்து வீச்சில் மிக மோசமாக உள்ள பெங்களூரு பேட்டிங்கில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் பந்துவீச்சில் சொதப்பி போட்டியில் தோல்வி அடைந்து வருவது நாம் பார்த்தது வருவதே. எனவே இந்த ஆண்டு அந்த அணியின் பவுலிங் பலத்தை அதிகரிக்கும் விதமாக வீரர்களின் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Steyn

முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றி தவிக்கும் பெங்களூர் அணி ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையாகக்கொண்ட தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் எடுத்தால் மட்டுமே இந்த ஆண்டு போட்டிகளில் வெற்றி பெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே வரும் 19ம் தேதி நடைபெற இருக்கும் ஏலத்தில் ஸ்டெயினை வாங்க உள்ளது. அவரை அணியில் வாங்கினால் மட்டுமே பந்துவீச்சில் பலம் கூடி பெங்களூர் அணி போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

Advertisement