ஆர்.சி.பி தவறவிட்ட நம்பர் 1 பவுலர் பற்றி உங்களுக்கு தெரியுமா ? – விவரம் இதோ

Abrcb
- Advertisement -

இந்தியாவில் இதுவரை மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா பார்க்கப்படுவது ஐபிஎல் தொடர். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்தத் தொடர் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்றதால் தற்போது பதிமூன்றாவது சீசனாக இந்த ஆண்டு நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தொடர் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுவரை முடிந்துள்ள 12 சீசன்களில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும், தோனி தலைமையிலான சென்னை சிஎஸ்கே அணி மூன்று முறையும் வென்றுள்ளன. இதில் பாவப்பட்டு பார்க்கப்படும் அணியாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது. ஏனெனில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இருந்தும் ஆர்சிபி ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை.

- Advertisement -

மேலும் அந்த அணியில் ஏற்கனவே, கெயில், வாட்சன், ராகுல் மற்றும் ஸ்டார்க் போன்ற சிறந்த வீரர்கள் ஆடி இருந்தாலும் அந்த வீரர்களை வைத்து ஆர்.சி.பி அணியால் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை. ஒரு சில சீசன்களில் சிறப்பாக விளையாடினாலும் இறுதிப் போட்டியில் தோற்று விட்டது. அதனால் தான் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளை போல தற்போது ஆர்சிபி வலுவாக காணப்படவில்லை.

Rcb

விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் மட்டும்தான் அந்த அணியில் நிரந்தர வீரர்களாக உள்ளனர். அந்த பட்டியல் தற்போது சாஹல் இணைந்துள்ளார். ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருந்தாலும் பவுலிங்கில் பொருத்தவரை சாகல் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். அவரைத் தவிர வேறு எந்த பெரிய பவுலரும் அணியில் இல்லாததே அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்க முடிகிறது.

- Advertisement -

அந்த வகையில் அந்த குறையை தீர்க்க விராட் கோலியிடம் ஒரு ஐடியாவை சொன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய தற்போதைய நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ராவை ஆரம்ப காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எடுப்பதற்கு முன்பாகவே நான் அவரை பெங்களூரு அணி எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி கூறினேன். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் பும்ராவை தட்டி தூக்கியது என்று பார்த்திவ் பட்டேல் தெரிவித்தார்.

Bumrah-1

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிமுகம் ஆனவுடன் பும்ரா மலிங்காவுடன் இணைந்ததால் அவர்களுடைய பௌலிங் யூனிட் மேலும் வலுப்பெற்றது. இருவருமே டெத் ஓவர்களை சிறப்பாக வீசுவதால் இரண்டு சீசன்களில் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமாதிரி சிறந்த வீரர்களை தவறவிட்டது மட்டுமல்லாமல் அணியில் இருக்கும் சிறந்த வீரர்களையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால் பெங்களூரு அணியால் ஒரு முறை கூட டைட்டிலை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement