ஆர்.சி.பி அணியில் இருந்து பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் அதிரடி நீக்கம் – விவரம் இதோ

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒவ்வொரு ஆண்டும் பல திறமையான வீரர்களை கொண்டிருந்தாலும் ஒரு முறை கூட ஐ.பி.எல் கோப்பையை வென்றதில்லை. பலமுறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள அந்த அணி கோப்பையை இதுவரை வென்றதே கிடையாது.

kristen

இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக சில மாற்றங்களை பெங்களூர் அணி நிர்வாகம் செய்துள்ளது. அதன்படி பெங்களூர் அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது :

தற்போதைய முதன்மை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர்கள் நீக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் கேடிச் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். பந்துவீச்சு பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று அணி நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.